மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் உள்ள பிரபல புத்தக விற்பனை நிலையம் ஒன்றும் சேலை விற்பனை நிலையம் ஒன்றும் வை.எம்.சி.ஏ அலுவலகமும் இன்று அதிகாலையில் தீக்கிரையாகின.
அதிகாலையில் ஏற்பட்ட இத்தீவிபத்திற்கு காலை 7.00 மணியளவில்தான் கல்முனை மாநகர சபையின் தீயணைக்கும் வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் புத்தக நிலையம் மற்றும் வை.எம்.சீ.ஏ அலுவலகம் முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன் சேலை விற்பனை நிலையம் பகுதியளவில் எரிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்தீவிபத்தில் கடைத்தொகுதியின் ஏனைய கடைகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளையில் இத்தீ விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரனணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment