Thursday, July 7

கிழக்கு மாகாணத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ” சிசுசெரிய ” போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை.



கிழக்கு மாகாணத்திலுள்ள போக்குவரத்து வசதிகள் குறைவாகவுள்ள மிகவும் பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதியினை மேம்மபடுத்தும் நோக்கில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ” சிசுசெரிய ” போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் அதிகளவிலான பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் தமது கல்வியை இடைநிறுத்திக் கொள்வதுடன் பொருளாதார கஷ்டநிலை காரணமாக தமது பெற்றோருடன் கூலி வேலைகளிலும் இணைந்து கொள்கின்றனர்.
சில பிரதேசங்களில் குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்திலிருந்து பல கிலோ மீற்றருக்கு அப்பால் பாடசாலைகள் அமைந்துள்ளதனால் தூரம் காரணமாக மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ”சிசுசெரிய ” திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 12 பஸ்களையும் இ மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பஸ்களையும் இ அம்பாறை மாவட்டத்தில் 18 பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஆரம்பத்தில் பரீட்சாத்தமாக நடாத்தப்படவிருக்கும் இவ் பஸ் சேவை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய பிரதேசங்களுக்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் எம்.எச்.உயதகுமார தெரிவித்தார்.

No comments:

Post a Comment