Sunday, November 20

பல்வேறு வீதி விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக சர்வதேச ரீதியாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கல்முனை நகரில்


பல்வேறு வீதி விபத்துக்களில் மரணித்தவர்களுக்காக சர்வதேச ரீதியாக ஒரு நிமிட மௌன அஞ்சலி (பிரார்த்தனை) செலுத்தும் நிகழ்வு இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப் பிரிவின் ஏற்பாட்டில் கல்முனை நகரில் இடம்பெற்றது.

இதன்போது காலை 10.05 மணிக்கு வீதியில் பயணித்த சகல வாகனங்களும் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்பட்டது.

உலகலாவிய ரீதியில் விபத்தில் உயிர் நீத்தவர்களுக்காக
நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒரு நிமிட மௌன பிரார்த்தனை நடைபெறுவது வழமையாகும். இதன் மூலமாக வீதி விபத்துக்களில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வொன்று ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுவது இதுவே முதல் தடவையென கல்முனை வீதி போக்குவரத்து பொலிஸா் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment