Monday, May 7

கல்முனை மாநகர முதல்வருக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்கும் ஐக்கிய வணிகர் அமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு முதல்வர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம். வலீத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் சம்மந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இதுவிடயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் ஐக்கிய வணிகர் அமைப்பினரால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

முதல்வர் இங்கு உரையாற்றும்போது,
அண்மைக்காலமாக எமது தமிழ் சகோதர உறுப்பினர்கள் சில முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து இருந்தாலும் தற்போது எல்லோரும் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒற்றுமையுடன் செயற்பட முன்வந்துள்ளமை மிக மகிழ்ச்சி அளிக்கின்றது.
எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க நாங்கள் பஸ்தரிப்பு நிலைய கடைகளில் நீதியான முறையில் 4 கடைகளை தமிழ் சகோதரர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். இந்த முடிவை எமது சபையின் தமிழ் உறுப்பினர்கள் உட்பட அணைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதுபோல, எனது முயற்சியினால் கல்முனை தமிழ் பிரதேசத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் அவ்வாறான சகல பிரச்சினைகளுக்கும் என்னால் முடியுமானவரை தீர்த்துத் தருவேன் என்றும் வாக்குறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது, கல்முனை மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, சபையின் நிருவாக உத்தியோகத்தர் அலாவுதீன், முதல்வரின் செயலாளர் எம். நிஜாமுதீன், பிரத்தியேகச் செயலாளர் ஏ.எல்.எம். இன்ஸாட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment