Monday, June 25

அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மகஜர்



அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மகஜர்நாட்டிலுள்ள ஏனைய ஏழு (07) மாகாணங்களில் 2012 காலப்பகுதி வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட்டுள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் 2009ஆம் ஆண்டு காலப்குதியை வரையறை செய்து நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனை தளர்த்தி 2012 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்குமாறு அரசைக் கோரும் தீர்மானமொன்று அம்பாறை மாவட்ட பட்டதாரிகளால் நிறைவேற்றப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் 2010 தொடக்கம் 2012 வரையான காலப்பகுதியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நேற்று (24) நடைபெற்றது. அதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள அமைச்சர்களை சந்தித்து அவர்களுடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று நியமனம் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் கலந்துரையாடப்பட்டது.

பட்டதாரி பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது அதில் பட்டம் பெற்ற ஆண்டு வரையறை செய்யப்படவில்லை. அவ்வாறு விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

ஓவ்வொரு மாவட்டத்திலும் 1350 பட்டதாரிகளுக்கு பயிலுனர் நியமனம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 1180 பேருக்கு மாத்திரமே நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பான மகஜரொன்றை ஜனாதிபதி, நிதி அமைச்சர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு அனுப்புவதற்கும் ஒன்றுகூடலில் தீர்மானிக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மகஜர்

 

No comments:

Post a Comment