
கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் மிக வேகமாக
அரசாங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்படுகின்றது. இலங்கை சுதந்திர பட்டதாரி
சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்
படுத்தப்படுகின்றது.
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு நியமனம்
வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன்,
அடுத்தகட்டமாக வடமாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கும் நியமனம்
வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கம் விடுத்துள்ள
அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
30 ஆண்டுகாலமாக இடம்பெற்ற பாரிய யுத்த
சூழலுக்கு மத்தியிலேயே கிழக்கு மற்றும் வடமாகாண பட்டதாரிகள் பட்டப்படிப்பை
மேற்கொண்டனர். இவர்களின் அயராத முயற்சி மற்றும் தியாகங்களை நாம் வெகுவாக
பாராட்ட வேண்டும். அத்துடன் பெற்றோரின் வழிகாட்டலினால் இன்று பட்டதாரிகளாக
சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் திறமைக்கு ஏற்ப பட்டதாரி
நியமனங்களை வழங்க வேண்டிய சூழ்நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கிழக்கு மற்றும் வடமாகாண பட்டதாரிகளுக்கு எவ்வித
பாகுபாடுமின்றி நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையை இலங்கை
சுதந்திர பட்டதாரி சங்கம் பாராட்டுகின்றது.
அரசாங்கம் கிழக்கு மற்றும் வடமாகாண
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இதயபூர்வமான நன்றியை எமது சங்கம் தெரிவித்துக்
கொள்கிறது.
அத்துடன் பட்டதாரிகளுக்கான நியமனங்களை
வழங்குவதற்கு பல வழிகளிலும் பக்கபலமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரும்,
சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை சுதந்திர பட்டதாரி
சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் ரஞ்சித்சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் எமது
சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
சங்கத்தின் செயலாளர் மனுல சமல் பெரேரா,
பியால் குருகே ஆகியோர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், சம்மாந்துறை
பகுதிகளுக்கு விஜயம் செய்து வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து தங்களது
பிரச்சினைகளை ஆராய்ந்தனர்.
No comments:
Post a Comment