Friday, July 6

கல்முனையில் “திறமைக்கு மரியாதை” விருது வழங்கும் விழா


121


சாய்ந்தமருது கலை, கலாசார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமையம் ஏற்பாடு செய்துள்ள “திறமைக்கு மரியாதை’” விருது வழங்கும் விழா எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, எஸ்.ஜீ.ஏ. நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.ஜனூஸின் எழுத்து ஆக்கத்தில் உருவான “வை திஸ் கொலவெறி” குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

எம்.ஏ.சி.ஷர்மில் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும்  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.ஸி.எஹியாகான் கௌரவ அதிதியாகவும்  அம்பாறை பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் புரவலர் கலாநிதி ஏ.எம்.றிஸ்வி சிறப்பு அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கவிஞரும் சமூக ஆர்வலருமான மருதூர் ஏ. ஹஸன் குறும்படத்தின் சிறப்பு இறுவெட்டினையும் பெறவுள்ளார். திறமைக்கு மரியாதை நிகழ்வில் பின்வருவோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளனர்.
  1. கலாபூஷணம் ஏ.எம்.அபுபக்கர் ( இசையமைப்பு)
  2. எம்.ஏ.சி.ஷர்மில் ( நடிகர்)
  3. கவிஞர் ஆர்.எம்.நௌஸாத் (தீரன்)
  4. எம்.எஸ்.எம்.றிஸ்வி ( இயக்குனர்)
  5. எம்.ஐ.எம்.அஸ்ஹர் (செய்தி, ஊடகம்)
  6. எம்.ஸி.பதுருதீன் கிஷோர் (ஒளிப்பதிவு, நடிகர்)
  7. எஸ்.றபீக் (அறிவிப்பாளர், கவிஞர்)
  8. எஸ்.ரீ.றவூப் (அறிவிப்பு, ஒலிபரப்பு தொழில் நுட்பம், நிர்வாகம்)
  9. மபாஹிர் எம்.மௌலானா (தயாரிப்பு, அறிவிப்பாளர்)
  10. எம்.கே.எம்.யூனூஸ் (சிரேஷ்ட தயாரிப்பாளர்)
  11. எம்.எஸ்.எம்.இர்பான் (செய்தி, தயாரிப்பு, அறிவிப்பு)
  12. முபாறக் எம். மொஹிதீன் (தயாரிப்பு, அறிவிப்பாளர்)
  13. எம்.எம்.உதுமாலெவ்வை (நிர்வாகம், சமூகசேவை)
  14. எஸ்.கோணேஸ்வரன் (இயக்குனர், தயாரிப்பாளர்)
  15. எம்.ஐ.எம்.முஸ்தபா (கல்வி, சமூகம், சாரணியம்)
  16. எஸ்.ஜனூஸ் (கவிதை, நாடகம், குறும்படம்)
  17. மசூர் அன்ஸகான் (அறிப்பாளர்)
  18. ஏ.பி.மதன் (நடிகர், ஊடகவியலாளர்)
  19. ஜெஸ்மி எம். மூஸா (கலை இலக்கிய ஆர்வலர்)
  20. நதீகா பிரியதர்ஷனி (நடிகை)
  21. தம்பிலெவ்வை இஸ்மாயில் (கவிதை, இலக்கியம்)
  22. ஸீ.பி.எம்.ஸியாம் (செய்தி, தயாரிப்பாளர்)
  23. ஏ.எல்.ஆஸாத் கபுல் (நிர்வாகி, சமூக சேவை)
  24. ஏ.எல்.எம்.நாஸர் (முகாமைத்துவம், சமூக சேவை)
  25. எலிசபத் நிரோஷிகா ஜோன் குமார குலசிங்கம் (நடனம், நடிப்பு)
  26. ஏ.ஸாஹிர் (ஓவியம், ஒளிப்பதிவு, நடிகர்)
  27. ஏ.எல்.நயீம் (அறிவிப்பாளர், ஒலிபரப்பு தொழில்நுட்பம்)
  28. கலைமகள் ஹிதாயா றிஸ்வி (கலை, இலக்கியம்)
  29. எம்.ஐ.எம்.சுஹைல் (அறிவிப்பாளர்)
  30. எம்.எம்.கபூர் (பாடகர்)

No comments:

Post a Comment