இந்த நாடு சுதந்திரமடைந்து 65 வருடங்தளைக்
கடந்துள்ள இந்நிலையில் ஜனாதிபதி அவர்களின் இந்த உரை முக்கியம்
பெறுகிறது. அனைத்து சமூகங்களுக்குமான சம உரிமை, கலாசார தனித்துவம், இன ஒற்றுமை
என்பவற்றை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி அவர்கள,; அடுத்த மதத்தினருக்கிடையில் பேதங்களை
உருவாக்குபவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த உரைக்குப் பின்னரும் குறித்த அந்த
அமைப்பு பகிரங்கமாக மேற்கொள்ளும் திட்டமிட்ட செயல்களினால் முஸ்லிம்
தலைமைகளும், முஸ்லிம் மக்களும் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள்.
ஜனாதிபதி அவர்கள் அண்மையில் இவ்விடயம்
தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக பாராளுமன்ற உபகுழு ஒன்றினை நியமித்துள்ளதை அறிய முடிகிறது.
இக்குழுவிற்கு உரிய தகவல்களையும்,
ஆதாரங்களையும் சமர்ப்பிப்பது இக்குழுவிலுள்ள
முஸ்லிம் பிரதிநிதிகள், பொறுப்பு வாய்ந்த சமூகத்தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரதும்
கடமையாதும். இந்நடவடிக்கையானது ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம் சமூகம்
தொடர்பான சரியான புரிதலை ஏற்படுத்துவதுடன் எமது சமூகத்திற்கு எதிரான அச்சுறுத்தல்கள்
மற்றும் சவால்களைக் களைவதற்கும் வழிவகுக்கும் என எமது சபை நம்புகின்றது.
தலைவர்,
அகில இலங்கை உலமா சபை,
சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளை.
No comments:
Post a Comment