தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலாவது நிகழ்வுக்காக ஏறாவூர் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் வருகைக்கான ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஏறாவூருக்கு வருகை தரும் ஜனாதிபதியவர்கள் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை அன்றைய தினம் காலை ஏறாவூருக்கு வருகை தரவுள்ள கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களால் இரண்டரைக் கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள அலிகார் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment