Monday, May 13

கல்முனை பிரதேசத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு;கல்முனை மேயர் ஸ்தலத்திற்கு விஜயம்

சாய்ந்தமருது , மாளிகைக்காடு மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தில் இன்றிரவு(12)  ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினை தொடர்ந்து கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த இயந்திர படகுகள் மற்றும் தோணிகள் உடைப்பெடுத்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.

நங்கூரம் அறுந்த நிலையிலும் உடைந்த நிலையிலும் பல இயந்திரப்படகுகளும் தோணிகளும் கரையொதிங்கியுள்ளன. கடல்நீர் வழமையை விட கரைக்கு வந்துள்ளதுடன் மீனவர்கள் கரையிலுள்ள தமது இயந்திரப்படகுகள் , வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பகான இடத்திற்கு
கொண்டு செல்வதில்  பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செய்தியறிந்த பிரதேச மக்கள் இரவு என்றும் பாராது கடற்கரையோரமெங்கும் திரண்டு காணப்படுகின்றனர்.

நிலமையினை நேரில் கண்டறிவதற்காக கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடற்கரை பிரதேசத்திற்கு இன்றிரவு விஜயம் செய்து மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கல்முனை பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் தற்போது கடல்கொந்தளிப்பு காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏனைய இயந்திரப்படகுகளையும் அதில் தங்கியுள்ள மீனவர்களையும் கரை சேர்ப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

செய்தி இணையத்தளத்திற்கு போகும் வரை கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் மேலும் பல தோணிகளும் இயந்திரப்படகுகளும் கரையை நோக்கி வருவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

Friday, May 10

கல்முனை மாநகர அபிவிருத்தி - ஜேர்மன் பிரதிநிதிகள் ஆராய்வு

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஷ் மீராசாஹிப் தலைமையில் ஜேர்மன் நாட்டு பிரதிநிதி குழுவினருடனான மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதல்வரின் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
ஜேர்மன் நாட்டு நியூனிக் நியுரன் பேக் நகரங்களிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அமுல்நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள பொலிவேரியன் கிராமத்தில் அமைக்கப்பட்ட 100 சுனாமி வீட்டுத்திட்டமானது மின் இணைப்பின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வாழ்கின்ற மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே குறித்த வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதற்கு உதவுமாறு முதல்வரினால் ஜேர்மனியே குழுவினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
 

Thursday, May 9

பலகோடிகளை ஏப்பம்விட்ட அரசியல்வாதி - கல்முனையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்துக்குள் புகுந்த பொதுமக்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுடுபட்டனர். குறித்த நிறுவன உரிமையாளரால் தாம் நிதி ரீதியாக ஏமாற்றப் பட்டமை தொடர்பிலேயே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். 
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் வாகனங்களை வழங்குவதாக  கூறிய – மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர், அவ்வாறே வாகனங்களையும் வழங்கியுள்ளார். ஆயினும், குறித்த வாகனங்கள் குத்தகை நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

Wednesday, May 8

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு






May 8, 2013  02:41 pm
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டுவந்த முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதன் வைத்திய அத்தியட்சர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவரை தற்காலிகமாக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ பிரசங்கத்தில் வீதி விபத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு உபதேசம்



அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதிப் போக்கு வரத்து ஒழுங்குகளைக் கடைப் பிடிப்பதன் ஊடாக ' சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணிதிரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு (06.05.2013) சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் றோஹன பிரதம அதிதியாகவும், அம்பாரை மாவட்ட மோட்டார் போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பியந்த பண்டார கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு,சம்மாந்துறை, வீரமுனை, சொறிக்கல்முனை, வளத்தாப்பிட்டி, மல்வத்த போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களின்  நம்பிக்கையாளர் சபையினர், இப்பிரதேசங்களில் மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்கள், கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார், மோட்டார் போக்கு வரத்துப் பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சட்டத்தரணி அஜித் றோஹன ' இன்று இலங்கையில் 431 பொலிஸ் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் மிக அதிகமான குற்றச்செயல்களும், முறைப்பாடுகளும், விபத்துக்களும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுக்கு அறிவுரைகள், அச்சுறுத்தல்கள், தண்டனைகள், நீதிமன்றத் தண்டனைகள் என வழங்கியும் மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் வெள்ளிக் கிழமைகளில் அவர்களது பள்ளிவாசல் 'குத்பா' பிரசங்கங்களை நன்கு மதிப்பதும், அதன்படி நடப்பதனையும் நாமறிவோம். எனவே இங்கிருக்கும் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகளின் உதவிகள் மூலம் விபத்துக்கள் அற்ற, சமாதான, அபிவிருத்திப் பூமியை நோக்கிப் பயணிக்க நாம் ஒன்றுபடுவோம்' எனக் கேட்டுக் கொண்டார்.( கடந்த கால அகோர விபத்துக் காட்சிகளும் நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்டன).
இறுதியாக வெள்ளிக்கிழமை  குத்பா பிரசங்கங்களிலும், இரவு நேர இசாத் தொழுகையின் பின்னரும்  பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை செய்வதென்றும், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களின் விபரங்கள் தொகுக்கப்பட்ட காட்சிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பெரிதாகப் பார்வைக்கு வைப்பதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம்.இஸ்மாயில், செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் ஆகியோர்களினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் றோஹனவிற்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

நோர்வேயின் அகதிகள் பேரவைக்கு கல்முனையில் பாராட்டு



நோர்வேயின்  அகதிகள் பேரவை இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளனர். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திற்கான  நோர்வேயின்  அகதிகள் பேரவையின் கல்முனை அலுவலகத்தின் செயற்பாடு இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் நிறைவு தின நிகழ்வுகள் இன்று (07.05.2013) காலை அதன் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி றிம்சியா கால்டீன் மற்றும் சட்டத்தரணி ஜெசீந்தா ராஜேந்திரன் ஆகியோரின் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த அமைப்பு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 8 வருட காலமாக அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டது. தகவல், சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி என்பவற்றினை மேற்படி அமைப்பு மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தது. 

கல்முனை மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான முறுகல், சுமூக நிலைக்கு வந்துள்ளது.

 

முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்தில் மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியுடன் நடந்து கொண்ட விதத்தினையடுத்தே ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே முறுகல் ஏற்பட்டது. இந்த முறுகல் இக்கூட்டத்தின் போது சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டது. 
கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் நிசாம் காரியப்பர் உட்பட ஆறு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரிப்பு செய்தனர். 
இந்த சர்ச்சை தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதனையடுத்தே முஸ்லின் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி தலைவரினால் கொழும்புக்கு அழைக்கப்பட்டு குறித்த பிரச்சினை ஆராயப்பட்டு சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டது. 
அத்துடன் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டத்திற்கு கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஆகியோரை அழைப்பது எனவும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசனலி, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் பிரதி முதல்வர் நிசாம் காரியப்பர் உட்பட கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tuesday, May 7

கல்முனை மேயராக மீராசாஹிப் தொடரவேண்டும் - சங்கரத்ன தேரர் ஹக்கீமுக்கு கடிதம்

கல்முனை மாநகர சபையின் முதல்வராக தொடர்ந்தும் சிராஸ் மீராசாஹிபே இருக்க வேண்டும் என கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார்.
நான் கல்முனை விகாரைக்கு பொறுப்பாளராக வந்து ஏறக்குறைய பத்தாண்டுகளாகின்றன. கல்முனையில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக இருந்த போதிலும் நான் இங்கு பெரும் பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம், தமிழ் மக்களுடன் மிகவும் அன்னியொன்னியமாக வாழ்ந்து வருகின்றேன். எனக்கு ஏராளமான தமிழ், முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். நான் கல்முனைக்கு வந்ததன் காரணமாக தமிழ் மொழியை நன்கு கற்றுக் கொண்டுள்ளேன். எனக்கு மொழிப்பிரச்சினை இல்லாததால் அனைவருடனும் சரளமாக பழகுகின்றேன்.

நூறுவீதம் முஸ்லிம்கள் வாழும்பகுதியில் பிள்ளையார் சிலை சேதம் வேதனையளிக்கிறது – ஜனா


நூறு வீதம் முஸ்லிம்கள் செறிந்துவாழும் சம்மாந்துறை பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்ட விடயமானது மிகவும் வேதனையளிப்பதாகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.


இன்று சம்மாந்துறைக்கு சென்ற அவர் அங்கு பத்திரகாளிம்மன் ஆலயத்துக்கு விஜயம்செய்து சேதமாக்கப்பட்ட பிள்ளையார் சிலையை பார்வையிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

'அம்பாரை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்துவையுங்கள்


அம்பாரை மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் பிரதான சில பிரச்சினைகளை தீர்க்கும் படி முஸ்லிம் மக்கள் கட்சி கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது
கிழக்கு மாகாண மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எழுத்து மூலம் தங்களிடம் ஒப்படைத்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்றித்தரத்தயார் என அண்மையில் ஊடகங்களில் கூறியிருந்தீர்கள்.  இதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் தங்களுடன் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.

Sunday, May 5

சாய்ந்தமருது அரசியல்வாதி மனப்பால் குடிக்கிறார் - சிராஸ் மீராசாஹிப்


அரசியலில் என்னை ஓரம் கட்டும் நோக்கத்தோடு செயல்படும் சதிகாரர்களின் வெளிப்பாடே எனது பிரத்தியேக செயலாளரின் வீடு தாக்கப் பட்டுள்ளமை என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு சாய்ந்தமருதில் உள்ள கல்முனை மாநகர முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இம்சாதின் வீட்டின் மீது கல்லெறி தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. இத்தாக்குதலினால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கல்முனை, சாய்ந்தமருது, பொத்துவில் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்!

images

இன்று இடம்பெற்ற இலங்கையின் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்துக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலின் முடிவுகளில் சில இன்று மாலை எமக்குக் கிடைக்கப் பெற்றது.


சாய்ந்தமருது பிரதேச செயலகம்
ஏ.எம். றிஸான் – 198
ஏ.எம். ஜஹான் – 174
ஏ.எம். அஸீம் – 09
ஏ.எம். ஸஜான் – 08
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 391
நிராகரிக்கப்பட்வை – 02
கல்முனை பிரதேச செயலகம்
ஏ.எம்.எம். முஜீப் – 339
எம்.ஏ.ஏ. ஆபித் – 6
ஏ.ஏ. நயீம் – 5
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 355
நிராகரிக்கப்பட்வை – 05
பொத்துவில் பிரதேச செயலகம்
ஐ.எல்.ஹில்முடீன் – 203
(72 மேலதிக வாக்குகள்)
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 340
நிராகரிக்கப்பட்வை – 06

கல்முனை மேயரது இணைப்புச் செயலாளரின் வீட்டுக்கு கல்வீச்சு


கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.எம்.இம்சாத்தின் வீட்டுக்கு இன்று இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் கல்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனால் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை

கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Thursday, May 2

கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சியினர் கொழும்பிற்கு அழைப்பு


கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தினை பகிஷ்கரித்த ஆறு உறுப்பினர்கள் உட்பட ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அண்மையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பில் கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

Wednesday, May 1

கல்முனைப் பிரதேசத்தில் அதிக மீன்கள்.



மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு கல்முனைப்பிரதேசத்தில் கரைவலை மீனவர்களால் அதிகளவு மீன் நேற்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்தமாதம் இப்பிரதேசத்தில் நிலவிய கடல் கொந்தழிப்பு காரணமாக கரைவலை மீனவர்களால் மீன் பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் தொழிலின்றி மிகவும் கஷ்ட்டத்தை அனுபவிக்க வேண்டிருந்தது.


கல்முனைப்பிரதேசத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக

கடல் மீன்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியிருந்ததோடு சந்தைகளில் மீன்களுக்கு பெரும் கிராக்கியும் ஏற்பட்டிருந்தது.