Thursday, May 16

கல்முனை சுனாமி வீட்டுத் திட்ட வழக்கு விசாரணைகள் 20ஆம் திகதி வரை ஒத்திவைப்பு



கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தின் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
174 வீடுகளை கொண்ட கல்முனை, இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத் திட்டத்தின் கழிவினை அகற்றுவதற்கான திரிட்மன் பிளானட் எனும் இயந்திரத்தை இயக்குவது தொடர்பில் கடந்த பல வருடங்களாக சர்ச்சை நிலவுகின்றது. இதனால் குறித்த சுனாமி வீட்டுத் திட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். 

அம்பாறையில் மூன்று பாரிய இராணுவ முகாம்கள்; மு.கா. எதிர்ப்பு

 
அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் மூன்று பாரிய இராணுவ முகாம்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்விடுத்துள்ளது.
 
சாய்ந்தமருது, பொத்துவில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகம் ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு இராணுவ முகாம்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன் மூலம் 500 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களுக்குச் சொந்தமாகவிருக்கும் ஆயிரக் கணக்கான காணிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மு.கா.வின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
 
போர் முடிவுக்கு வந்துவிட்ட பிற்பாடு அராசங்கம் ஏன் இவ்வாறு பாரிய இராணுவ முகாம்களை அமைக்க வேண்டும் எனவும் ஷபீக் ரஜாப்தீன் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Wednesday, May 15

கல்முனை மாநகர சபைக்கு ஆசிய மன்றத்தின் உதவிகள் தொடரும்



கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்திவரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (14.05.2013) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரனிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு ஜூன் மாதம்வரை ஆசிய மன்றத்தின் இச்செயற்பாடு கல்முனை மாநகர சபையில் தொடரப்பட உள்ளது. 

நேற்று வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட ஆள்கடல் மீனவர்களின் படகுளுக்கு நஷ்டஈடு - ஹரீஸ் நடவடிக்கை



கிழக்கில் நேற்று வீசிய பலத்த காற்றினால் கல்முனை,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  பிரதேச கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு மீன்பிடிப் படகுகள் அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுக்கப்பட்டன. இதனால் கல்முனை பிரதேசத்தில் நான்கு படகுகள் சேதத்துக்குள்ளானதுடன் ஒரு படகும், தோனியும் கடலில் முழ்கியதுடன் மீனவர்களின் வாடிகளும் சேதமடைந்தன. 
மேலும் சூறாவளி அபாய இன்னும் நீங்கவில்லை, இலங்கையை கடந்து செல்ல நான்கு நாட்கள் எடுக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. 

கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டம் (படங்கள்)



ஓன்றிணைந்த ஆசிரியர் தொழிற் சங்கங்கின் அழைப்பின பேரில்; 14.05.2013 செவ்வாய்க் கிழமை கல்முனை கல்வி வலயத்தில் சுகவீன லீவுப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டார்கள்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஜனநாயக ஆசரியர் சங்கம் ஆகியன இணைந்து சுகவீன லீவுப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கல்முனை வலய ஆசிரியர்களை கேட்டுக் கொண்டன.

Tuesday, May 14

மகேசனின் சாய்ந்தமருது விஜயத்தின் போது......


நேற்று அதிகாலை முதல் அம்பாறை மாவட்டத்தில் வீசிய பலமான காற்றின் காரணமாக பிரதேசமே விழித்துக்கொண்டது மரங்கள் சாய்ந்தன, தகரங்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டனபாடசாலையில் ஓடுகள் பறந்தன,மின்சாரம் தடைப்பட்டது. விசேடமாக மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகள்  கரைக்கு அடித்து தள்ளப்பட்டுள்ளதுடன் சில படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.

Monday, May 13

கல்முனை தனியார் பஸ் உரிமையாளர்கள் பிரச்சினைக்கு முதல்வர் தலைமையில் தீர்வு!


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று முதல்வர் காரியாலயத்தில் இடம்பெற்றது. 
இதன்போது தனியார் பஸ் உரிமையாளர்கள், சில தனியார் பஸ் ஆசனப் பதிவு நிலையங்கள் கூடுதல் தரகுப் பணத்திற்காக தங்களுக்காக பதிவு செய்த ஆசனங்களை வெளியூர் பஸ்களுக்கு வழங்குவதனால் தாம் இதனால் நஷ்டம் அடைவதாக தெரிவித்தனர். 

இன்று கல்முனை வடக்கு வைத்தியசாலையில் மீண்டும் ஆர்ப்பாட்டம்!(photos)


கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கெதிராகஇன்று திங்கட்கிழமை மீண்டும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை வளாகத்தில் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள்  சுலோக அட்டைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்.
1

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு!

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூன்று பேர் எதிர் வரும் சபை அமர்வில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தொடர்ச்சியாக புறக்கணிப்பு நடப்பதாகவும், அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு அமைச்சர்களும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு வருகின்ற நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கல்முனை பிரதேசத்தில் பாரிய கடல் கொந்தளிப்பு;கல்முனை மேயர் ஸ்தலத்திற்கு விஜயம்

சாய்ந்தமருது , மாளிகைக்காடு மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தில் இன்றிரவு(12)  ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினை தொடர்ந்து கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த இயந்திர படகுகள் மற்றும் தோணிகள் உடைப்பெடுத்து கரையொதுங்க ஆரம்பித்துள்ளன.

நங்கூரம் அறுந்த நிலையிலும் உடைந்த நிலையிலும் பல இயந்திரப்படகுகளும் தோணிகளும் கரையொதிங்கியுள்ளன. கடல்நீர் வழமையை விட கரைக்கு வந்துள்ளதுடன் மீனவர்கள் கரையிலுள்ள தமது இயந்திரப்படகுகள் , வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பகான இடத்திற்கு
கொண்டு செல்வதில்  பலவிதமான கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
செய்தியறிந்த பிரதேச மக்கள் இரவு என்றும் பாராது கடற்கரையோரமெங்கும் திரண்டு காணப்படுகின்றனர்.

நிலமையினை நேரில் கண்டறிவதற்காக கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கடற்கரை பிரதேசத்திற்கு இன்றிரவு விஜயம் செய்து மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கல்முனை பிராந்திய கடற்படை பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு உடனடியாக மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதுடன் தற்போது கடல்கொந்தளிப்பு காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏனைய இயந்திரப்படகுகளையும் அதில் தங்கியுள்ள மீனவர்களையும் கரை சேர்ப்பதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.

செய்தி இணையத்தளத்திற்கு போகும் வரை கடல் கொந்தளிப்பாக இருப்பதுடன் மேலும் பல தோணிகளும் இயந்திரப்படகுகளும் கரையை நோக்கி வருவதனை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

Friday, May 10

கல்முனை மாநகர அபிவிருத்தி - ஜேர்மன் பிரதிநிதிகள் ஆராய்வு

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஷ் மீராசாஹிப் தலைமையில் ஜேர்மன் நாட்டு பிரதிநிதி குழுவினருடனான மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதல்வரின் செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 
ஜேர்மன் நாட்டு நியூனிக் நியுரன் பேக் நகரங்களிடமிருந்து நிதி உதவிகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் அமுல்நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் செயற்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கல்முனை மாநகர பிரதேசத்தில் உள்ள பொலிவேரியன் கிராமத்தில் அமைக்கப்பட்ட 100 சுனாமி வீட்டுத்திட்டமானது மின் இணைப்பின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வாழ்கின்ற மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே குறித்த வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதற்கு உதவுமாறு முதல்வரினால் ஜேர்மனியே குழுவினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
 

Thursday, May 9

பலகோடிகளை ஏப்பம்விட்ட அரசியல்வாதி - கல்முனையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்துக்குள் புகுந்த பொதுமக்கள் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுடுபட்டனர். குறித்த நிறுவன உரிமையாளரால் தாம் நிதி ரீதியாக ஏமாற்றப் பட்டமை தொடர்பிலேயே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். 
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மானிய அடிப்படையில் வாகனங்களை வழங்குவதாக  கூறிய – மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர், அவ்வாறே வாகனங்களையும் வழங்கியுள்ளார். ஆயினும், குறித்த வாகனங்கள் குத்தகை நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

Wednesday, May 8

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பிரச்சினைக்கு தீர்வு






May 8, 2013  02:41 pm
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டுவந்த முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதன் வைத்திய அத்தியட்சர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவரை தற்காலிகமாக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

அம்பாறை மாவட்டத்தில் ஜும்ஆ பிரசங்கத்தில் வீதி விபத்துக்கள் குறித்து பொது மக்களுக்கு உபதேசம்



அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வீதிப் போக்கு வரத்து ஒழுங்குகளைக் கடைப் பிடிப்பதன் ஊடாக ' சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணிதிரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு (06.05.2013) சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்ற இம்மாநாட்டில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி அஜித் றோஹன பிரதம அதிதியாகவும், அம்பாரை மாவட்ட மோட்டார் போக்கு வரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பியந்த பண்டார கௌரவ அதிதியாகவும்  கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு,சம்மாந்துறை, வீரமுனை, சொறிக்கல்முனை, வளத்தாப்பிட்டி, மல்வத்த போன்ற பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களின்  நம்பிக்கையாளர் சபையினர், இப்பிரதேசங்களில் மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்கள், கடமையில் ஈடுபட்டிருக்கும் பொலிசார், மோட்டார் போக்கு வரத்துப் பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் சட்டத்தரணி அஜித் றோஹன ' இன்று இலங்கையில் 431 பொலிஸ் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளில் மிக அதிகமான குற்றச்செயல்களும், முறைப்பாடுகளும், விபத்துக்களும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் தான் இடம் பெற்றுள்ளன. இவர்களுக்கு அறிவுரைகள், அச்சுறுத்தல்கள், தண்டனைகள், நீதிமன்றத் தண்டனைகள் என வழங்கியும் மாற்றங்கள் ஏதுமில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் வெள்ளிக் கிழமைகளில் அவர்களது பள்ளிவாசல் 'குத்பா' பிரசங்கங்களை நன்கு மதிப்பதும், அதன்படி நடப்பதனையும் நாமறிவோம். எனவே இங்கிருக்கும் உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகளின் உதவிகள் மூலம் விபத்துக்கள் அற்ற, சமாதான, அபிவிருத்திப் பூமியை நோக்கிப் பயணிக்க நாம் ஒன்றுபடுவோம்' எனக் கேட்டுக் கொண்டார்.( கடந்த கால அகோர விபத்துக் காட்சிகளும் நவீன இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்டன).
இறுதியாக வெள்ளிக்கிழமை  குத்பா பிரசங்கங்களிலும், இரவு நேர இசாத் தொழுகையின் பின்னரும்  பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை செய்வதென்றும், கடந்த காலங்களில் நடைபெற்ற விபத்துக்களின் விபரங்கள் தொகுக்கப்பட்ட காட்சிகள், பொதுமக்கள் கூடுமிடங்களில் பெரிதாகப் பார்வைக்கு வைப்பதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ்.ஏ.எம்.இஸ்மாயில், செயலாளர் அல்ஹாஜ்.ஏ.எம்.றஸீன் ஆகியோர்களினால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் அஜித் றோஹனவிற்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

நோர்வேயின் அகதிகள் பேரவைக்கு கல்முனையில் பாராட்டு



நோர்வேயின்  அகதிகள் பேரவை இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்து நாடு திரும்ப உள்ளனர். இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திற்கான  நோர்வேயின்  அகதிகள் பேரவையின் கல்முனை அலுவலகத்தின் செயற்பாடு இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் நிறைவு தின நிகழ்வுகள் இன்று (07.05.2013) காலை அதன் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி றிம்சியா கால்டீன் மற்றும் சட்டத்தரணி ஜெசீந்தா ராஜேந்திரன் ஆகியோரின் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த அமைப்பு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் 8 வருட காலமாக அம்பாறை மாவட்டத்தில் செயற்பட்டது. தகவல், சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி என்பவற்றினை மேற்படி அமைப்பு மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தது.