Monday, May 23


கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவன் என்.சஞ்ஜீவநாத் தயாரித்த மோட்டார் கார்...


சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மோட்டார் கார் ஒன்றினை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவன் என்.சஞ்ஜீவநாத்  தயாரித்து அனைவரையும் வியல்பில் ஆழ்த்தியுள்ளார்.


கல்லுாரியில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி பயிலும் இம்மாணவன் பொத்துவில் தொகுதியைச் சேர்நத திருக்கோவிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.
புதிய கண்டு பிடிப்புகைளை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்ட இம்மாணவன் சூழலில் கழிவாக அகற்றப்படும் பொருட்களைக் கொண்டே காரின் பெரும் பகுதியை தயாரித்துள்ளார்.இதற்காக இவர் 22.000 ரூபாவினை மட்டுமே செலவு செய்துள்ளதுடன் இக்காரில் இரண்டு பேர் பயணம் செய்யக்கூடியதாகவும் உள்ளது.
மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய இக்காரினை சிறியளவில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் வலது குறைந்தவர்களும் பயன்படுத்தலாம் என அம்மாணவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment