செவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2011 16:47
கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.அலாவுதீன் பிராந்திய ஊடகவியலாளரான யூ.எல்.மப்றூகை இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மப்றூகிற்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமந்த தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார்.
ஆப்போது, கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.அலாவுதீன், தனது தொலைபேசியில் தொடர்புகொண்டு மப்றூகை அச்சுறுத்தியதாக மாநாகர சபை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்முனை நகரில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு முறையாக செயற்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்ததை செய்தி எழுதியமேயே இவர் அச்சுறுத்தப்பட்டமைக்கான காரணம் என தெரியவருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment