Thursday, July 21

எருமை மாட்டிறைச்சி விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு தண்டப்பணம் விதிப்பு


கல்முனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக எருமை மாட்டிறைச்சிகளை விற்பனை செய்ய முற்பட்ட மூவருக்கு தலா 20,000 ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த கல்முனை நீதிபதி, கைப்பற்றப்பட்ட இறைச்சியை அழிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுப்பகுதியில் வைத்து இரு எருமை மாடுகளை வெட்டி அதன் இறைச்சிகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த இறைச்சிகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்

No comments:

Post a Comment