Saturday, July 23

சுற்றுலாத்துறையை மேம்படுத்த கிழக்கு மாகாணத்துக்கு எயார் டெக்ஸி சேவைகள்


[ சனிக்கிழமை, 23 யூலை 2011, 03:13.36 AM GMT ]
கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன
இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தமது சேவைகளை கிழக்கின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஸ்தரிக்கவுள்ளது.


அருகம்பேக்கான எயார் டெக்சி. சேவையும் நடத்தப்படவுள்ளது. அத்துடன் அது திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன்மூலம் உல்லாச பயணிகளுக்கு ஒரு மணித்தியாலத்தில் இலங்கையின் கிழக்கு பிரதேசத்துக்கு செல்லக்கூடியதாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையின் கிழக்கு பகுதிகளுக்கு வருடம் ஒன்றுக்கு 654 ஆயிரம் பேர் வரை உல்லாசப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது அவர்களுக்கு பிரதான பாதைகள் ஊடாக செல்வதற்கு சுமார் 6 மணித்தியாலங்கள் செல்கின்றன.
இதனை 45 நிமிடங்கள் முதல் ஒரு மணித்தியாலங்கள் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காகவே எயார் டெக்ஸி சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக தற்போது கனடாவில் டுவின் ஒட்டர் சீ பீலேன் பயிற்சியில் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment