Monday, October 31

சாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தின் வருடாந்த மகாநாடு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்




சாய்ந்தமருது அமானா நற்பணி மன்றத்தின் வருடாந்த மகாநாடு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.பரீட் தலைமையில் இடம் பெற்ற இம்மகாநாட்டில் அதிக எண்ணிக்கையிலான காணகளற்ற மக்கள் கலந்து கொண்டனர்.



சாய்ந்தமருது இ மாளிகைக்காடு மற்றும் கல்முனைக்குடி பிரதேசங்களில் காணிகளற்ற மக்கள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமது இளைய சந்ததியினருக்கு குடியிருப்புகளை அமைப்பதற்கான நிலத்தை அடையாளம் கண்டு அவற்றை அபிவிருத்தி செய்து தமக்கென ஒரு இடத்தை அடையாளப்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த கால சுனாமி இ வெள்ள அபாயம் மற்றும் யுத்த சூழ்நிலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் கடற்கரையோரத்திலிந்து 65 மீற்றருக்கப்பால் தமது குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென அரசாங்கத்தின் கட்டளைக்கமைய சாய்ந்தமருது கரைவாகு வட்டை பிரதேசத்தில் விவசாயம் செய்கை பண்ணப்படாமல் தரிசாக காணப்படும் நிலங்களை நிரப்பி அதில் தமது குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இருந்தும் வயற்காணிகளை நிரப்பி குடியிருப்புகளை அமைப்பதற்கு எதிராக விவசாய அமைச்சும் இ காணி அமைச்சும் அனுமதியினை மறுத்துள்ளமையினால் இந்த அமைப்பின் மூலமாக சாதகமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்காகவே இம்மகாநாடு கூட்டப்பட்டது.

சாய்ந்தமருது இ மாளிகைக்காடு மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தில் 1 அங்குல நிலம் கூட இலட்சக்கணக்கில் விலை போகும் நிலையில் எங்களது பிள்ளைகளுக்கு ஒரு துண்டு வளவு வாங்கி எப்போது நாம் வீடுகட்டுவது என்றும் அவர்களுக்கு திருமணம் முடிப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் எத்தனையோ வசதியற்ற குடும்பங்களுக்கு இவ்வாறான வயற்காணிகளை நிரப்பி அதில் குடியிருப்புகளை அமைப்பதென்பது முக்கியமானதொரு பணியாகும் என மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருமே கருத்து தெரிவித்தனர்.

கரைவாகு வட்டையில் ஏற்கனவே பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நிரப்பப்பட்டு 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனத்திதும் அரசாங்கத்தின் உதவியினால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினூடாக வீடுகள் நிர்மானிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒரு வருடத்தில் ஒரு முறை மட்டுமே வேளாண்மை செய்யக்கூடிய இவ்வயற்காணியால் விவசாயி ஒருவர் ஒரு போதும் இலாபம் பெற்றதாக சரித்திரம் இல்லை. பதிலாக பல இலட்டக்கணக்கான பணத்தை முதலீடு செய்து வேளாண்மை செய்து நஷ்டப்பட்டவர்களே அதிகம் . இதனால் இக்காணிகளை நிரப்பி குடியிருப்புகளை அமைத்துக் கொள்வதென்பது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரியதொரு நன்மையாகவே உள்ளது என பலரும் கருதுகின்றனர்.





No comments:

Post a Comment