Wednesday, November 30

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்



 
 
கிழக்கு மாகாண பாடசாலைளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர் செய்யும் நோக்கில் கல்முனைக் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 185 ஆசிரியர்கள் கல்முனை கல்வி மாவட்டத்தை விட்டு வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்திலிருந்து 126 ஆசிரியர்களும், சம்மாந்துறைக் கல்வி வலயத்திலிருந்து 43 ஆசிரியர்களும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் கூடுதலானோர் கிண்ணியா, மூதூர், திருகோணமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் 2012 ஜனவரி முதல் செயற்படும் மூன்றாண்டு காலத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்ற வேண்டுமன்ற நிபந்தனையில் வழங்கப்படும் இவ்விடமாற்றம் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புள்ளித் திட்டத்தின் அடிப்படையில் இடம்பெறுகிறது.

இவ்விடமாற்றம் வருடாந்த இடமாற்றம் அல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இவ் இடமாற்றத்திற்கெதிராக மேன்முறையீடுகளை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாணக் கல்விபணிப்பாளருக்கு அனுப்பிவைக்க முடியுமெனவும் செயலாளர் புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

ஆசிரியர் சமமின்மையை போக்கும் விதத்தில் இவ்இடமாற்றம் இவ்வருடம் ஜீன் மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தொழிற்சங்கங்கள், ஆளும்கட்சி, எதிர்கட்சி, அரசியல் வாதிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக இறுதி நேரத்தில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இரத்தச் செய்ய்பட்டது.

தற்போது கல்முனை மாவட்டத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 185 ஆசிரியர்களுள் பெரும்பாலோனோர் பெண் ஆசிரியர்களாவர். அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment