Wednesday, November 30

இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு


(சம்மாந்துறை நிருபர் - ஏ.ஜே.எம்.ஹனீபா)
கடந்த 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு நிரந்தர அபிவிருத்திகளோ, பல்கலை கழகத்துக்கு தேவையான கட்டிடங்களோ உருவாக்கப்படாமல் இலங்கை நெற் சந்தைப்படுத்தும் சபையினால் அரிசி ஆலைக்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்களிலேயே உள்ளக மாற்றங்களை செய்து இன்று வரைக்கும் இயங்கி வருகின்றது.
இதனால் இப் பல்கலை கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் இங்கு கற்ற பழைய மாணவர்கள் மத்தியிலும் பாரிய சந்தேகங்களும், அச்சமும் ஏற்பட்டிருந்தது என இலங்கை தென் கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல்
தெரிவித்தார்.

நேற்று(28) திங்கட்கிழமை இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார் அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் இப்பல்கலைக் கழகத்தின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற போது விஷேடமாக சம்மாந்துறையிலுள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் அபிவிருத்திக்காகவும் பண ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது.
அந்நிதிகள் அவ்வப்பொது அபிவிருத்திக்காக பயன்படுத்தாமல் வருட இறுதியில் திறைசேரிக்கு தொடர்ச்சியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வந்த வரலாறுகளை கானமுடிந்தது இவ்வாறான நிலமைகளை அறிந்து கொண்டதனாலேயே அன்று இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்களும் பொதுமக்களும் மற்றும் இங்கு கற்ற பழைய மாணவர்களும் சந்தேகம் கொள்ள காரணமாக அமைந்துள்ளது.
பொதுவாக நோக்குமிடத்து இங்கு நடைபெற்ற செயற்பாடுகள் அனைத்தும் அன்றைய சந்தேகத்துக்கு தீனியாக அமைந்துள்ளது. அதாவது தென்கிழக்கு பல்கலை கழகத்தின் அபிவருத்தி தொடர்பாக தீர்மானிக்கின்ற போது சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் தொடர்பாக கவனிக்கப்படவில்லை என்பதே பொதுவான கருத்தாகும்.
இவ்வாறான சந்தேகங்களிலிருந்து மீட்சியடையும் வகையில் என்னுடைய நிர்வாக காலத்தில் இங்குள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இங்குள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றுக்காக எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக உயர் கல்வியமைச்சின் 320 மில்லியன் ரூபாவில் நவீன வடிவமைப்புடன் கூடிய விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதி மற்றும் பீட கட்டிடம் என்பன அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
150 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட இப்பலகலை கழகம் இன்று 400 மாணவர்கள் கல்வியை தொடர்கின்றனர் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் 12மாதங்களில் பூர்த்தி செய்யப்படவுள்ளது அதன் பின்னர் 1000 மாணவர்களை வைத்துக் கொள்வதற்கான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.
இவ்ஊடக சந்நிப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களான எம்.ரீ.எம்.சஹீட், ஏ.எம்.நபீல், பல்கலை கழகத்தின் பதிவாளா; எச்.ஏ.சத்தார், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா, பொறியியலாளர் சித்தீக், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை சிரேஷ்டவிரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வேலைத்திட்டம் மத்திய பெறியியல் ஊசார்த்துணை பணியகத்தின் (சீ.ஈ.சீ.பி) நிபுணத்துவ உதவியுடன் சிசிற கட்டிட நிறுவனத்தின் மூலம் ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment