Tuesday, November 1

கல்முனை மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கு அனுமதி

தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்முனைப் பகுதி ஆழ்கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை தரித்து வைப்பதில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை தவிர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி விக்கிரமவினை சந்தித்து குறித்த பிரச்சினைகளை எடுத்துக் கூறியதன் பயனாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.


இதனை அடுத்து அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைத்துள்ளனர். இந்நடவடிக்கையினை துரிதமாக மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸூக்கு அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment