Friday, November 25

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் வெள்ள அபாயம் தொடர்பில் மேயருடன் கலந்துரையாடல்


 
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானம், மாணவர் விடுதி மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது இதன்காரணமாக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையால் விசேடமாக பாடசாலையில் தங்கி கற்கும் விடுதி மாணவர்கள் சுகவீனம் மற்றும் தோற்று நோய்களுக்கு உள்ளாவதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவும் இவ்வேளையில் இந்நிலைமையை கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பாடசாலையின் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஆசிரியர் குழுவொன்று
மாநகர சபையின் மேயரை சந்தித்தது இதன் போது கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.நசார்டீன், எம்.சாலித்தீன் ஆகியோரும் இச்சந்திப்பில் இணைந்துகொண்டனர்.

நிலைமையின் அவசரத்தை கருத்திற் கொண்ட முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், தம்மை சந்திக்க வந்த குழுவினருடன் உடனடியாக பாடசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார் இதன்போது மாநகர ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி, மாநகரசபை பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மற்றும் அதிகாரிகளும் சென்றிருந்தனர். பாடசாலையின் நிலைமையினையும் பாடசாலையின் சுற்றுப் புறத்தையும் நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் வெள்ள நீர் வடிந்து செல்லத்தக்கவகையில் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைப் பணித்தார்.





No comments:

Post a Comment