
ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள ஒலுவில் கரையோரப் பிரதேசங்கள் சுமார் 100 மீற்றர் தூரம் கடல் குடியிருப்புப் பிரதேசங்களை (ஊரை) நோக்கி சில தினங்களுக்குள் நகர்ந்துள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாகவும் ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிக்காக கட லினுள் போடப்பட்டுள்ள பாரிய பாராங் கற்கள் காரணமாகவும் தற்போது ஒலு வில் பிரதேசக் கடல் பெரும் கொந் தளிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின் றனர். ஒலுவில் துறைமுகத்தை அண்மித்துள்ள பல ஏக்கர் தென்னந்தோட்டங்கள் கடலினுள் சென்றுள்ளன.
இதனால் 600 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், நூற்றியிருபது மீன்பிடி வாடிகள், உபகரணங்கள் கடலினுள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனையடுத்து மீனவர்கள் இருப் பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஒலுவில் துறைமுகத்திற்கு வடக்கேயுள்ள பிரதேசங்களையே நோக்கி கடல் நீர் உள்ளே செல்கின்றது. ஒலுவில் பிரதேசத்தில் அண்மைக் காலமாக கடலரிப்பு ஏற்பட்டு வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் குடியிருப்பு இடங்களை நோக்கி புகுந் துள்ளது.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்து இப்பொழுது ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
No comments:
Post a Comment