Thursday, November 24

காஸ்வின், கேரளா, மலேசியா மாநிலங்களுடன் கிழக்கு மாகாணத்தை இணைத்து கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டம்; மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் முன்மொழிவு


Jameelகிழக்கு மாகாணத்தை ஈரான் நாட்டின் காஸ்வின், இந்தியாவின் கேரளா மற்றும் மலேசியா நாட்டின் மலாக்கா ஆகிய மாநிலங்களுடன் இணைத்து கிழக்குமாகாணத்தின் கல்வி வர்த்தகம் கைத்தொழில் தொழிழசார் கல்வி, தகவல் தொழிநுட்பம் சுயதொழில் முயற்சி மற்றும் மொழியாற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் முன்மொழிந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற அமர்வில் இது தொடர்பான திட்ட வரைபை முன்வைத்து மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உரை நிகழ்த்தினார். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் கல்வி வர்த்தகம் கைத்தொழில் தொழிழசார் கல்வி, தகவல் தொழிநுட்பம் சுயதொழில் முயற்சி மற்றும் மொழியாற்றல் துறைகளை சிறப்பாக முன்னேற்ற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையினை இறக்காம பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மாதம் ஒன்றுக்கு முப்பது இலட்சம் ரூபா இலாபத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியினை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

No comments:

Post a Comment