Thursday, May 31

கல்முனையில் கௌரவம் பெற்ற மாநகர முத்துக்கள் :நிகழ்வு

00001
கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழவுக்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும், கெளரவ அதிதிகளாக பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ.ஹசனலி, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்,கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர், முன்னாள் மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா ஆகியோர் உட்பட விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களர்களும், அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்து சிப்பித்தனர்.
இந்நிகழ்வின்போது, பிரதேச ஊடகவியலாளர்களும் விசேடமாக வெளியிடப்பட்ட புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், முன்னாள் மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானாவை இந்நாள் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் பாராட்டும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றது.
வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்நிகழ்வின்போது, பிரதேசத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
Print Friendly

No comments:

Post a Comment