
அரச நிறுவனங்களை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் அரசதிட்டத்தின் கீழ் இத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முலைத்தீவு, போன்ற மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட 75 அரச நிறுவனங்களில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தொலைத் தொடர்பு தொழிநுட்ப முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனங்களை கணினிமயப்படுத்தல், இணைய மற்றும் தொலைநகல் வசதிகளை உருவாக்குதல், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதன் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 475 அரச நிறுவனங்களுக்கு இவ்வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment