Saturday, June 16

உயர்நீதிமன்றில் ஒலுவில் கேசாங்கேணி கிராமத்தவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்


தமது நடமாடும் உரிமை மட்டுப்படுத்தப்படுவதாகவும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்காக தம்மை தமது காணிகளிலிருந்து வெளியேற்றவுள்ளதாகவும் முறைப்பாடு செய்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை அம்பாறை மாவட்டத்தின் ஒலிவிலில் உள்ள கேசாங்கேணி கிராமத்தவர்கள், உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.


ஏ.எல்.கதீஜா உம்மா, ஆதம்பாவா இப்ராலெப்பை ஆகியோர் தமது சார்பிலும் கிராம மக்கள் சார்பிலும் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கிழக்கு மாகாண இராணுவத் தளபதி, அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர, அம்பாறை மாவட்ட பிரதி காணி ஆணையாளர், காணி ஆணையாளர், சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இம்;மனு நீதியரசர்கள் கே.ஸ்ரீபவன், சத்யா ஹெட்டிகே, பிரசாத் தெப் ஆகியோர் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை கவனத்திற்கொள்ளப்பட்ட இம்மனு ஜூலை 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை, இப்போதுள்ள நிலையில் மாற்றம் செய்யப்படக்கூடாதென நீதியர்கள் குழாம் பணித்தது.

No comments:

Post a Comment