Friday, June 29

முதலமைச்சர்களாக இருந்தவர்களையே முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் கட்சி அறிவிப்பு, கிழக்கு மாகண முதலமைச்சராக சந்திரகாந்தனுக்கு மீண்டுமொரு வாய்ப்பு


மாகாணசபைகள் நேற்று கலைக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர்களாக இருந்தவர்களையே தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கமைய கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேமலால் திஸாநாயக்க ஆகியோர் தத்தம் மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அணிகளுக்கு தலைமை தாங்குவர்.
ஐ.ம.சு.கூட்டமைப்பில் ஆகவும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த தேர்தலுக்காக புனரமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய சுசில் பிரேமஜயந்த, முன்பு முதலமைச்சர்களாக இருந்தவர்களே மீண்டும் பிரதம வேட்பாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடன் அவற்றுக்காக ஒதுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பற்றி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment