Saturday, February 23

பொத்துவில் மண்மலையில் உருவாகப்போகும் ”பன்சல” (புகைப்பட இணைப்பு) - இனவாதத்தின் இன்னுமொரு கட்டம்


 

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொத்துவில் கிராமத்தின் கிழக்குப் புறமாக கடற்கரையை அண்மித்த பிரதேசம்தான் சின்னப் புதுக்குடியிருப்பு றஹ்மத் நகர், மதுரஞ்சேனை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளாகும்.
இப்பகுதிகளில் ஏறத்தாழ 1500 தனியான முஸ்லிம் குடும்பங்கள் ஒற்றுமையாக வசித்து வருகின்றன. இப்பிரதேசத்தில் வேறு எந்த மாற்று இனத்தவர் ஒருவரும் வசித்திருக்கவில்லை. இப்பிரதேச எல்லைக்குள் புதைபொருள் ஆய்வு நிலையமும் சிங்கள சகோதரர்கள் எவரும் சூழவர இல்லாமல் முகுதுமகாவிகாரை எனும் பெயருடன் ஒரு பௌத்த மதகுரு மாத்திரமே உள்ளார்.
 
உள்ளூர் உல்லாசப் பிரயாணிகளின் உல்லாச புரிதான் றஹ்மத் நகர்  சின்னப்புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள ஏறத்தாழ  60 அடி உயரமான இயற்கையான மனல் மேடாகும். இதை செல்லமாக மண்மலை என்றும் அழைப்பர். ஆதிகாலத்தில் ஏற்பட்ட தொரு சுனாமியால் இவ்வாறு ஏற்பட்டதாக முதியவர்கள் கூறுவர்.
இப்பிரதேசத்தில் அல்கலீஜ், அல் அக்ஷா, மஸ்ஜிதுல் இஹ்ஸான் ஜூம்மாபள்ளிவாயில்களும், தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயம், அல் முனவ்வறா, அல் நூறானியா ஆகிய பாடசாலைகளும், டுவிங்கல் ஸ்டார், மதுரஞ்சேனை முன்பள்ளி ஆகியனவும் அமையப் பெற்றுள்ளது.
விடுமுறை நாட்களிலும், போயா தினங்களிலும், வெள்ளிக் கிழமை நாட்களில் மாலை வேளையிலும் இம் மண்மலையைக் கண்டு கழிப்பதற்காகவும், ஏறி இறங்குவதற்காகவும் வெளியூர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தனியாகவும் குடும்பமாகவும் வந்து செல்வர். இம்மண் மலை அல்லது மணல் மேடானது ஆசியாக் கண்டத்திலேயே பிரபல்யமான பெயர் போன இடமாகும்.
16.2.2013 சனிக்கிழமை மாலை முகுது மகாவிகாரை கடற்கரையோரமாக டோசர்சகிதம் மணல்மலையை நோக்கி பாதை இடுவதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தது மாலையோடு மாலையாக இவ்விடயம் நிர்வாக ரீதியில் பிரதேச சபைக்கோ, பிரதேச செயலகத்துக்கோ எதுவும் தெரியாது.

No comments:

Post a Comment