கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நேற்று புதன்கிழமை பாண்டிருப்பு, பெரியநீலாவணை, கல்முனை, மணல்சேனை, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ் கிராமங்களிற்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அப்பிரசேங்களில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளையும் பார்வையிட்டார்.
Friday, November 11
ஒலுவில் துறைமுகத்தால் கிராமங்கள் அழிவடையும் ஆபத்து! எம்.பி பைசால் காசீம்
Thursday, November 3
கல்முனை மாநகர முதல்வர் தமிழ் கிராமங்களுக்கு விஜயம்
கல்முனையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

November 3, 2011 02:14 pm
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10.30 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனைக்குடி கடற்கரை வீதியில் வசிக்கும் 45 வயது மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹிம் நஜிமுத்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் காவலாளியாக கடமை புரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனைக்குடி கடற்கரை வீதியில் வசிக்கும் 45 வயது மதிக்கத்தக்க முஹம்மது இப்றாஹிம் நஜிமுத்தீன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் காவலாளியாக கடமை புரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு. கல்லடிபாலம் ஊடான போக்குவரத்து மூடப்படும்
மாடுகள் வெட்டப்படாவிட்டால் ஏற்படும் விளைவுகள் யாவை?-விடிவெள்ளி
மாநகர சபைத் தேர்தலும் கல்முனை-சாய்ந்தமருது உறவும்-விடிவெள்ளி
Wednesday, November 2
"புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும்" செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 2010/2011ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும் எனும் தலைப்பிலான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கலை கலாச்சார பீடத்தில் இவ்வாண்டுக்கான கல்வியினை தொடர்வதற்காக புதிய மாணவர்களை வரவேற்றலும் ஆற்றுப்படுத்தலும் எனும் தலைப்பிலான செயலமர்வு மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம். ரமீஸ் அப்துல்லா தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் புதிய ஆசிரியர் சேர்ப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிய வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளோமா தாரிகளிடமிருந்து மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவை 3 ஐ இலும் டிப்ளோமாதாரிகள் இ.ஆ.சேவை 3 ஐஐ இலும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் . 18- 45 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்க-லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி 30.11.2011 ஆகும். போட்டிப் பட்சை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை ஆகிய இடங்களில் நடத்தப்படும்
தென் கிழக்கு பல்கலை கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்க கோரி அடையாள வேலை நிறுத்தம்

Wednesday, 02 November 2011
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமும் இனைந்து கூட்டுக் குழு இன்று 02.11.2011 ஆம் திகதி புதன்கிழமை முழு நாளும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இன்று இவ் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அலுவலக வேலைகள் அனைத்தும் ஸ்தம்மிதம் அடைந்து காணப்படுகின்றது.
கிழக்கிலங்கை முஸ்லிம்களது மரபு தொடர்பான ஆங்கில நூல் வெளிவந்துள்ளது
The Muslim Heritage of Eastern Sri Lanka என்ற தலைப்பிலான ஆங்கில நூல் ஒன்று வெளிவந்துள்ளது. 10 வேறுபட்ட மையக்கருக்களில், 14 கட்டுரைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நன்கறியப்பட்ட கிழக்கிலங்கை கல்வியாளரான எஸ்.எச்.எம். ஜெமீலும், பத்திரிகையாளர் ஆஸிஃப் ஹுஸைனும் இணைந்து பல ஆய்வாளர்கள் எழுதியுள்ள கட்டுரைகளை தொகுத்து பதிப்பாசிரியர்களாக செயற்பட்டுள்ளனர். இதனை ஜெஸீமா இஸ்மாயில் தலைமைவகிக்கும் முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல் முன்னணி வெளியிட்டுள்ளது.
கிழக்கு முஸ்லிம்களது பாரம்பரியம், மரபுரிமை தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள முதல் நூலாக இது இருக்கக்கூடும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பதினொரு அத்தியாயங்களை உள்ளடக்கி 301 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இதில் 200 புகைப்படங்களும் உள்ளன.
பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்; தென்கிழக்குப் பல்கலையும் ஆதரவு
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் தொழிற் சங்கங்களின் சம்மேளனமும் அனைத்து பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் தொழிற் சங்கங்களின் சம்மேளனமும் இனைந்த கூட்டுக் குழு புதன்கிழமை முழு நாளும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென மேற்கொண்ட தீர்மானத்துக்கமைவாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கு பற்றுவர் என அறிவிக்கப்படுகிறது.
இப்போராட்டம சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறவுள்ளதொடு அனைத்து ஊழியர்களும் இதில் பங்கு பற்றுவர் எனவும் இவ்வடையாள வேலை நிறுத்தத்திலிருந்து பாதுகாப்பு ஊழியர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்படுகிறது.
Tuesday, November 1
கல்முனை மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கு அனுமதி
தற்போதைய காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கல்முனைப் பகுதி ஆழ்கடல் மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை தரித்து வைப்பதில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினையை தவிர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவர் துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி விக்கிரமவினை சந்தித்து குறித்த பிரச்சினைகளை எடுத்துக் கூறியதன் பயனாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் மீன்பிடிப் படகுகளை ஒலுவில் துறைமுகத்தில் தரித்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உணவு மற்றும் போசாக்கு சிரேஷ்ட அமைச்சருமான பி. தயாரெட்னவின் அரசியல் வாழ்வில் 35 வருடங்களை புர்த்தி செய்வதனை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னிணியின் உறுப்பினரும் சமூக சேவையாளருமான
ஏ.எம்.றியாஸின் சேவை நலன் பாராட்டும் நிகழ்வு
எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது
அம்பாறையில் கடும் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)
October 31, 2011 08:42 pm
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெயதுவரும் மழை காரணமாக கல்முனை - அம்பாறை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி கல்முனை - சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதி என்பவற்றிற்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அவ்வீதிகளில் போக்குவரத்து செய்யும் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இம்மழை காரணமாக விதைப்பு வேலைகளுக்கு தயாராகவிருந்த வயல் நிலங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், பிரதான வீதிகள் பலவும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெயதுவரும் மழை காரணமாக கல்முனை - அம்பாறை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதி கல்முனை - சென்றல்கேம்ப் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதி என்பவற்றிற்கு மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக அவ்வீதிகளில் போக்குவரத்து செய்யும் மக்கள் சிரமத்திற்கு மத்தியில் பயணித்து வருகின்றனர். இம்மழை காரணமாக விதைப்பு வேலைகளுக்கு தயாராகவிருந்த வயல் நிலங்கள் உடைப்பெடுத்துள்ளதுடன், பிரதான வீதிகள் பலவும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)









