
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை சகல வசதிகளும் கொண்ட மாகாண தள
வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின்
ஏற்பாட்டில் நடைபெற்ற நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக்
குழுவினருடனான சந்திப்பின்போதே முதலமைச்சர் இந்த இணக்கப்பாட்டை
வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் இல்லத்தில் நேற்று
ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சந்திப்பில் கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்
ஏ.எல்.ஏ.மஜீத், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி எம்.ஐ
எம்.மாஹிர், அபிவிருத்திக் குழு பிரதித் தலைவர் நஸீர் அஹ்மத், பொருளாளர்
ஏ.எல்.அன்வர்தீன், டாக்டர் ஜாபீர், டாக்டர் றசீட் உட்பட மற்றும் பல
பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.