Wednesday, June 19

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை இழக்கக் கூடும்?

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பதவியை இழக்கக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு வேறும் ஒருவர் விரைவில் நியமிக்கப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
 
மாகாண முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்குமாறு ஆளும் கட்சி உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரி வருகின்றனர். அண்மையில் இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
 
அண்மைக்காலமாக ஆளும் கட்சியினர் கிழக்கு மாகாண சபை அமர்வுகளை பகிஷ்கரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமர்வுகளை பகிஷ்கரித்து வருகின்றனர். தற்போதைய மாகாண முதலமைச்சர் செயற்திறனற்றவர் என குற்றம் சுமத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக கடமையாற்றி வரும் அமீர் அலி முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, June 18

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் ஜூலையில் திறப்பு?



 
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார். 


திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு மாகாண சபை அமர்வை ஆளும் தரப்பினர் புறக்கணிப்பு


sri lanka east கிழக்கு மாகாண சபை ஆளும் தரப்பு 20 உறுப்பினர்களும்   அமர்வை  பகிஷ்ஸ்கரித்துள்ளனர். என்று அறிய முடிகிறது.கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்திற்கான பொதுச்சபைக் கூட்டம்  இன்று (18) காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது .
இதன்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாத்திரமே ஆளும் தரப்பு சார்பில் சமூகமளித்துள்ளார் . கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலான்மை செலுத்தி வருகிறார் என்ற குற்றசாட்டை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றமை தெரிந்ததே
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு..!

அரச தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 17.06.2013 இடம்பெற்றது இதன்போது அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச மீனவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக  திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஜனாதிபதியின் கவனத்திக்கு கொண்டுவந்துள்ளார்.
இம்மாவட்டத்தில் ஆழ்கடல் மீனவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.இதையடுத்து மீன்பிடி அமைச்சர் ராஜித செனாரத்னவிற்கு ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான சகல பூர்வாங்க நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்  தெரிவித்தார்.
இதேவேளை ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பாகவும், இதனால் இப்பிரதேச மக்கள் அனுபவித்துவரும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹகீம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.இது விடயமாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாக திகாமடுல்ல மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.

Monday, June 17

பொதுபல சேனாவுக்கு எதிராக நிச்சயம் வழக்கு தொடர்வேன் - ஆஸாத் சாலி

இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை கூறி இன ஐக்கியத்திற்கு சவால் விட்டு, மாத மோதலை உருவாக்க முயற்சிக்கும் பொதுபல சேனாவுக்கு எதிராக நிச்சயம் வழக்கு தொடரப்படுமென ஆஸாத் சாலி குறிப்பிட்டார். ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதுதொடர்பில் கருத்துக்கூறிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொதுபல சேனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சட்டத்தரணிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதற்கான ஒளி,ஒலி ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. மழுமைய ஆதாரங்களுடனே நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். பிரதான 3 முக்கிய விவகாரங்களை மையப்படுத்தியே பொதுபல சேனாவுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்படும்.
மேலும் பொதுபல சேனாவின் இனவாத நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறோம். தற்போது முஸ்லிம் பிரதேசங்களிலும் பொதுபுல சேனா தலைகாட்ட முயல்கிறது. கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டத்தை தடுத்துநிறுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகைள ஏற்படுத்தினேன. இதன்காரணமாக அம்பாறைக்கு பொதுபல சேனாவின் கூட்டம் இடமாற்றப்பட்டது.
ஆனால் ஹரீஸ் எம்.பி.யோ ஊடகங்களையும், மக்களையும் தவறாக வழிநடாத்தியுள்ளார். அவரால்தான் பொதுபல சேனாவின் கூட்டம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இது பொய். இதற்கு முன்னரும் ஹரீஸ் எம்.பி. பொய் சொல்லியுள்ளார். பொய் சொல்லியே அவர அரசியல் செய்கிறார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் பொய் சொல்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் பொய்யர்களின் கூடாரமாக போயுள்ளது. இவை எல்லாவற்றையும் அம்பலப்படுத்தவே நான் கிழக்கு மாகாணம் சென்று அங்குள்ள முஸ்லிம்களை சந்திக்கவுள்ளேன் என்றார்..!

கிழக்கு மாகாணத்திற்கு செல்கிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநர பிரதி மேயருமான அசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் என்னை உரையாற்ற அழைப்பு விடுக்கிறார்கள். அந்தவகையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களும் தமது பிரதேசங்களுக்கு வரும்படி என்னை வலியுறுத்தினர்.
அந்தவைகயில் எதிர்வரும் 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கும் 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அசாத்சாலி குறிப்பிட்டார்

கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் வீடுகளை துருக்கி நிர்மானிக்கவுள்ளது

DSC_2580
கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட, அனர்த்தங்களால் விதவையான,  யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த வசிப்பிடமற்ற மக்களுக்கு இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இஸ்கந்தர் கே. ஒக்யே, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.
அமைச்சர் ஹக்கீம், துருக்கிய தூதுவர் ஒக்யே ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று திங்கள் கிழமை (17) நீதியமைச்சில் இடம்பெற்ற பொழுது அமைச்சர் ஹக்கீம் இருப்பிட வசதியின்றி அல்லறும் மக்கள் பற்றி பிரஸ்தாபித்த போதே துருக்கியத் தூதுவர் இதனைத் தெரிவித்தார். இச் சந்திப்பில் துருக்கி – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் உயர் அதிகாரி அய்டின் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Saturday, June 8

கல்முனை நெனசல அறிவகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு





கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டுவரும் நெனசல ” அறிவகத்தின் ” 4வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 07.06.2013 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

நெனசல நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாதி கான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய ஆரம்ப பிரிவிற்கான உதவி கல்விப் பணிப்பாளர் இஸட் . எம்.நதீர் மௌலவி கௌரவ அதிதியாகவும் , சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் ,கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை நெனசல நிறுவகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடநெறிகளை புர்த்தி செய்த 311 மாணவ மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.


Friday, June 7

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் ஆரம்பகால வரலாறு


முஸ்லிம்கள் ஓரிடத்தில் குடியேறி அங்கு வாழத் தொடங்கியதும் அவர்கள் வசிப்பதற்குரிய வீடுகள் அமைக்கும் போது பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்துக் கொள்வது இஸ்லாமிய வரலாறாகும்.
சாய்ந்தமருதில் முஸ்லிம்கள் வாழத் தொடங்கிய காலத்தில் ஊரின் தென் பகுதி காடாக இருந்துள்ளது. அக்காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டியெடுத்து இப்பொழுது பெரிய பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தில் மரங்களையும் இலுக்குகளையும் கிடுகுகளையும் கொண்டு சிறிய பள்ளிவாசலொன்றை தற்காலிகமாக அமைத்துக் கொண்டார்கள். இது முன்னர் முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட்டது.
12ஆம் நூற்றாண்டில் தஃவாப் பணிக்காக பக்தாத் நகரில் இருந்து முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி அவர்களின் சிஷ்யர் இலங்கை வந்ததாகவும் அவர் அக்கால சிங்கள அரசனின் (கஜபாகு) புதல்வனது தீராத நோயைக் குணப்படுத்தியதினால் அவருக்கு அந்த அரசன் கரைவாகுவை பரிசாகக் கொடுத்து அங்கு காணப்பட்ட பள்ளிவாசல்களை முகைதீன் பள்ளிவாசல் என அழைக்கப்பட வேண்டும் என கட்டளையிட்டதாகவும் முன்னோர்கள் கூறுகின்றனர்.
இப்பள்ளிவாசல் 1691ஆம் ஆண்டளவில் மட்டக்களப்புக் கச்சேரியில் அடை அறவீட்டுக் கணக்கராக கடமைபுரிந்த சதக்குலெவ்வை என்பவரினால் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. 1870ம் ஆண்டில் பிரதம மரைக்காயர் மீராலெவ்வைப் போடி வன்னியனார் காலத்தில் சுமார் 1000 பேர் தொழக்கூடிய இடவசதியுள்ள பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது. 1961ம் ஆண்டில் பிரதம மரைக்காயர் ஜனாப் மு.அ. அப்துல் கபூர் காலத்தில் பள்ளிவாசலின் முன்பக்கமாக மண்டபமொன்று அமைத்து முகப்பு வேலைகளும் செய்யப்பட்டு இப்பள்ளிவாசல் புதுப்பொலிவுடன் விழங்கியது. தற்போதைய பள்ளிவாசல் கட்டடம் சுமார் 5000 பேர் தொழக்கூடிய இடவசதி கொண்ட நவீன இருமாடிக் கட்டடமாக கட்டுவதற்கு 1985ம் ஆண்டு பிரதம மரைக்காயர் அல்ஹாஜ் M.I.M. மீராலெவ்வை காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு 2003ம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.




கல்முனை சாஹிரா கல்லூரி ஆசிரியர்களின் அந்த நாள் புகைப்படங்கள்


கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் நாளை 9 மணிநேர மின்வெட்டு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 9. மணி  நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது,  மாளிகைக்காடு, இஸ்லாமாபாத் பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவனை, மணல்சேனை,  நற்பிடடிமுனை துரைவந்தியமேடு மற்றும் மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் நாளை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.
அவசர திருத்த வேலை காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கல்முனை பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.  

கொம் டெக் கல்வி நிறுவனத்தின் சான்றுதல் வழங்கும் நிகழ்வு



கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதியதன் பின்னர் உயர் தரத்துக்கு செல்வதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கொம் டெக் கல்வி நிறுவனத்தில் அமெரிக்க சக்காத் நிறுவனத்தின் புலமை பரிசு திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பம்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் போன்ற பாடங்களை  கற்று வெளியேறிய மாணவ மாணவிகளுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு ஒன்று (2013.06.06) மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது பாரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனையிலிருந்து அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ள பொது பல சேனாவின் ஒன்றுகூடல்


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையிலும் அம்பாறையிலும் பொதுபல சேனா ஒன்றுகூடலை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. சிங்களவர்களே இல்லாத, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கல்முனையில் இந்த ஒன்றுகூடலுக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கல்முனையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்களுடனான பொதுபல சேனாவின் ஒன்றுகூடல் அம்பாறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த தமிழ் மக்களை அம்பாறைக்கு வருமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

பொது பல சேனாவின் கல்முனை கூட்டம் ரத்து

கடும்போக்கு பெளத்த அமைப்பான பொது பல சேனா கல்முனையில் நடத்தவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்முனையில் கூட்டம் நடத்த  முஸ்லிம்கள் காட்டிய கடும் எதிர்ப்பு காரணமாகவே இக்கூட்டம் ரத்து  செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இது தொடர்பில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே  , அம்பாறை, கல்முனை பிரதேசங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட கூட்டம் ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்தார். அத்துடன் முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுவதை மறுத்த அவர் தூரம் மற்றும் நேரமின்மை காரணமாகவே அது ரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
 
இதனிடையே கல்முனையில் தாம் கூட்டம் நடத்த எந்த ஏற்பாடுகளையும் செய்வில்லை என குறிப்பிடும் அவர் அங்கு ஒரு சிலருடன் கலந்துரையாடவே ஏற்பாடுகள் முன்னடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
 
எவ்வாறாயினும் கடந்த புதன் கிழமையன்று கல்முனையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக டிலந்த  விதானகே உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது சிறந்தது - கல்முனை மேயர்

தனது தனிப்பட்ட குடும்ப அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் எனக் கூறிக்கொண்டு முன்னும் தெரியாமல் பின்னும் தெரியாமல் பத்திரிகையில் அறிக்கை விடுவதை முபாறக் அப்துல் மஜீட் தவிர்த்துக் கொள்வது சிறந்த ஒரு நடவடிக்கையாக அமையும் எனக் கருதுகின்றேன். எனத் தெரிவித்து கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் நேற்று பத்திரிகை ஒன்றிற்கு விடுத்திருந்த அறிக்கைக்கு பதில் அறிக்கையிலே முதல்வர் சிராஸ் இவ்அறிக்கையினை விடுத்துள்ளார்.