Tuesday, July 26

அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு

26/07/2011

காத்தான்குடி டீன் வீதியில் கடற்கரையோரமாக அமையப்பெற்றுள்ள MSM. அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின்  நினைவாலயத்தில் அவரது  87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரால்  அன்னதான நிகழ்வு கடந்த சில நாட்களாக  மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த நிகழ்வானது  இசை முழக்கங்களுடன் பாரிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு  நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் ஆண், பெண் வித்தியாசமின்றி சகலரும் கலந்து கொண்டிருப்பத்துடன் ஒருசில வெளியூர் முகங்களையும் காணமுடிகின்றது.
இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு முக்கிய உலமாவை காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறினார்,

“இது முற்று முழுக்க இஸ்லாத்திற்கு மாறுபட்ட வகையிலான ஏனைய மத உற்சவங்களை ஒத்தது. இங்கு அன்னதானம் என்ற பெயரில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளும் முற்றிலும் இஸ்லாத்திற்கு மாறுபட்ட நூதன செயல்கள் ஆகும். அனைத்து நூதன செயல்களும் வழிகேடுகளாகும், அனைத்து வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச்செல்லும் என்று தெரிவித்தார் .
மேலும் அவர் கூறுகையில், இங்கு வழங்கப்படுகின்ற அன்னதானமானது இஸ்லாத்தில் எங்குமில்லாத ஒரு வழிமுறை என்பதோடு, இந்த உணவுகளை உண்பது இஸ்லாத்தின் பார்வையில் ஹராமாகும். இந்த வழிகேடுகளில் இருந்து அல்லாஹ் நமது மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றும் எமக்கு தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தொடர்பாக காத்தான்குடி இன்போ தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரை தொடர்பு கொள்வதற்கு செய்த முயற்சிகள் இந்த செய்தி பதிவேற்றும்வரை பலனளிக்கவில்லை என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment