Tuesday, July 26

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு


By Afzal On Tuesday, July 26, 2011
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவான 17 பொறியியல் துறை மாணவர்கள் உட்பட 75 பல்கலைக்கழக மாணவர்களையும் மற்றும் விளையாட்டுதுறையில் தேசிய மட்டத்திற்கு தெரிவான 30 மாணவர்களையும் பாராட்டி க.பொ.த.உயர்தர மாணவர் தினத்தில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் அல் ஹாஜ் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத்தலைவருமான சட்டத்தரணி றவுப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கௌரவ அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ. தௌபீக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் பொறியியல் துறைக்கு ஒரே தடவையில் 17 மாணவர்கள் தெரிவாகி வரலாற்று சாதனை புரிந்துள்ள மாணவர்கள் , கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சாதனைகளை ஏற்படுத்தி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் , உயர்தர விஞ்ஞான ,கலை மற்றும் வர்த்தக துறையில் பல்துறையிலும் சாதனை ஏற்படுத்திய மாணவர்கள் , கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோரை பாராட்டி அதிதிகள் கௌரவிக்கவுள்ளனர்.

No comments:

Post a Comment