Tuesday, July 26

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் தொழிநுட்ப மாற்றீடு பயிற்சி



(யூ.கே. காலித்தீன்)

தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் தொழிநுட்ப மாற்றீடு பயிற்சி செயல் முறை பட்டறையொன்று சாய்ந்தமருது பிரதேச
செயலகத்திற்குட்பட்ட ”திவி நெகும” பயனாளிகளுக்கு இன்று விதாதா வளநிலையத்தில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ”திவிநெகும” மனைப்பொருளாதார திட்டத்திற்கு அமைவாக இடவசதி குறைந்த பயனாளிகள் வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கையினை குறைந்த நிலப்பரப்பில் பயிரிடுவது சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிற்சிப்பட்டறை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் விதாதா வள நிலைய தொழிநுட்ப குழுவினாரால் நடாத்தப்பட்டது. இச் செய்முறை பயிற்சி பட்டறையானது ஒவ்வொரு மாதமும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  விதாதா வள நிலைய பொறுப்பதிகாரி எல். அஸ்வர் தெரிவித்தார்.




No comments:

Post a Comment