Tuesday, July 26

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு





சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
அதன் தலைவரும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபருமான அல்-ஹாஜ் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக் (ஜவாத்) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மைதானத்திற்கான மண் நிரப்பும் பணியை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாரை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம் அமீர் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஐ.எம். கடாபி, அம்பாரை மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி எஸ்.எம்.ஏ. லத்திப்இ சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ. அன்வர்  ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டனர்.     
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக் (ஜவாத்) தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாவினை இவ் மைதான அபிவிருத்திற்காக முதற்கட்டமாக ஒதுகீடு செய்திருந்தார். இம்மைதானத்தை பூரணத்துவம் பெற்ற மைதானமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியில் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழக செயலாளர் எஸ். முஹம்மட் கான் பெரு முயற்சி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக்கின் சேவையினை பாராட்டி கழக உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.   





No comments:

Post a Comment