அம்பாறை நகரப்பகுதியில் இரண்டு மதுபானசாலைகள் உட்பட மூன்று கடைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு; உடைக்கப்பட்டு ஒரு இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை நகர பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பிரதான வீதியில் உள்ள மதுபானசாலைகள் இரண்டும் பலசரக்கு கடை ஒன்றையும் உரிமையாளர்கள் வழமை போல் பூட்டிவிட்டு சென்றதாகவும் இன்று காலை வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு மதுபானசாலையொன்றில் வைக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் பலசரக்கு கடையில் இருந்த 5 ஆயிரம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளi மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment