Tuesday, November 22

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்யாலயத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்யாலயத்தில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் இப்பாடசாலையின் பழைய மாணவரும் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத் தலைவருமான எம்.ஐ.எம்.கலீல் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின் போது பாடசாலையில் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதள்களும், சிரேஷ்ட மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும், வசதி குறைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும்
நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.




No comments:

Post a Comment