Saturday, November 19

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களுக்கும் சிரேஸ்ட மாணவர்களுக்குமான இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களுக்கும் சிரேஸ்ட மாணவர்களுக்குமான இன நல்லுறவு மேம்பாட்டு ஒன்று கூடல் உலக வங்கியின் திட்டத்தின் அனுசரணையுடனும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் வழிகாட்டலிலும் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
HETC திட்டத்தின் பணிப்பாளர் கே.எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வானது மூவின மாணவர்களுக்கிடையிலான இனநல்லுறவையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் நோக்கிலயே இடம் பெற்றது. இதன்போது மூவினகலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலாச்சார ரீதியிலான உணவுகளும்
பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் இணைப்பாளர்களான எம்.ஏ.எம்.சமீம், பி.இளங்கோ, சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஏ.எப்.எம்.அஸ்ரப், மாணவர் நலன்புரிச் சேவை பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா, விரிவுரையாளர்கள் மற்றும் மாணவா்களும் கலந்து கொண்டனர்.
சிரேஸ்ட மாணவர்களால் புதியமாணவர்கள் இவ்வாறான நிகழ்வின் மூலம் வரவேற்கப்பட்டமை பல்கலைகழக வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.







No comments:

Post a Comment