Saturday, November 19

ஜனாதிபதி பிறந்ததினத்தையிட்டு சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜூம்மா பள்ளி வாசலில் விஷேட துஆப் பிராத்தனையும், முஸ்லீம் சமய அனுஷ்டானமும்- அப்படி என்னதான் கேக்கிறீங்களோ?


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் 66வது பிறந்ததினத்தையிட்டும் இரண்டாவது பதவிக்காலத்தின் முதலாவது வருட பூர்த்தியினையுட்டும் அம்பாரை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திரு நீல் த சில்வா வின் பணிப்புரைக்கு அமைவாக அம்பாரை மாவட்ட மட்டத்திலான விஷேட துஆப் பிராத்தனையும், முஸ்லீம் சமய அனுஷ்டானமும் இன்று (19) காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை பத்ர் (ஹிஜ்றா) ஜூம்மா பள்ளி வாசலில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஸாட், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர்களான எம்.ரீ.ஏ.கரீம், எம்.எல்.ஏ.மஜீட் இணக்கசபையின் தலைவர் எஸ்.எச்.ஏ.றாசீக் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் மௌலவி ஐ.எல்.எம்.மஹ்ரூப் அவர்களினால் விஷேட துஆப்பிராத்தனையும், மார்க்க செற்பொழிவும் இடம் பெற்றது.




No comments:

Post a Comment