Friday, June 17

ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு

ஆசிரியர் இடமாற்றத்தை கைவிடக்கோரி கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டுவர முடிவு


June 17, 2011  03:10 pm

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல் தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

மாணவர்களின் நன்மையை கருத்திற் கொண்டு செயற்படாத சில சுயநல அரசியல்வாதிகள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஆசிரியர் நியமனத்தை பகடைய்காயாக பயன்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆசிரியர் நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

எனினும் மாகாண அமைச்சரவையின் இத்தீர்மானத்தை கிடப்பில் இட்டு ஆளுநரின் கட்டளைப்படி ஆசிரியர் இடமாற்றங்களுக்கான கடிதங்கள் வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் இடமாற்றத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்று கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு இவர்கள் விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை 01.01.2012 அன்று வழக்குமாறு வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்பட்டால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 21ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வில் ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்குப் பின்னரும் ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்டால் சபை நடவடிக்கையில் இருந்து வெளியேறுவோம் எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உள்ளிட்ட சிலர் இன்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றத்தை இடைநிறுத்துமாறுக் கோரி சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று பொது மக்கள் மாணவர்கள் சேர்ந்து ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இடமாற்றங்கள் எவ்வகையிலும் இரத்தாகாது


தினகரன் ௧௭-௦௬-2011




எத்தகைய நிலையிலும் ஆசிரிய இடமாற்றங்களில் மாற்றமில்லை. வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்கள் ரத்துச்செய்யப்படமாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே முதலமைச்சரும் உள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். டி. ஏ. நிஷாம் தெரிவித்தார். அதேவேளை; மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்ற கண்டிப்பான பணிப்புரையை சகல அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஆசிரிய இடமாற்றங்களை ரத்துச் செய்யக்கோரி நேற்றும் கிழக்கில் கல்முனை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இன்றைய தினமும் பெருமளவிலான கிழக்கு மாகாண பாடசாலைகள் ஆர்ப்பாட்டத்திலீடுபட உத்தேசித்துள்ளதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன. இந்நிலையில் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெவிக்கையில்;
ஆசிரிய இடமாற்றத்தைக் கண்டித்து நேற்று கல்முனையில் ஐந்து பாடசாலைகளிலும் மட்டக்களப்பில் மூன்று பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாணவர்கள் பாடசாலைக்கு வருவதைத் தடுத்துள்ளனர்.
எவ்வாறெனினும் ஆசிரியர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடியும். பெற்றோரும் அவ்வாறுதான், ஆனால் மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. ஒரு பிழையான கலாசாரம் வளர்க்கப்படக் கூடாது. இது விடயத்தில் பாடசாலை அதிபர்கள் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் ஒரு செய்தியாளர் மாநாட்டை நடத்தினார். அதன்போது இடமாற்றம் ரத்துச் செய்யப்படமாட்டாது என்ற அவரது நிலைப்பாட்டையும் அவர் வெளியிட்டார்.
அரசாங்கமும் வழங்கப்பட்ட இடமாற்றங்களை ரத்துச் செய்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவே உள்ளது. அத்துடன் பெரும்பாலான பாடசாலைகளில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் உள்ளனர் என்பதும் கருத்திற்கொள்ளப்படவேண்டும்.
சில பாடசாலைகளில் முதலாம் தரம் முதல் 12ம் தரம் வரையான வகுப்புகள் உள்ளபோதும் ஆசிரியர்கள் மூன்றோ நான்கோ பேர்களே உள்ளனர். மேலதிக ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்பதை சகலரும் உணர்ந்து செயற்படுவது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Thursday, June 16

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு றோயல் பாடசாலை

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு றோயல் பாடசாலை



Bookmark and Share
கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இறைவெளிக்கண்ட வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட 456 குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் நலன் கருதியும், கூட்டு ஆதன முகாமைத்துவ குழுவின் கோரிக்கைக்கு இணங்கவும் றோயல் பாடசாலை அமைக்கப்படவுள்ளது.

இப்புதிய பாடசாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.

இதன் பூர்வாங்க வேலைகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கல்முனை வலயக் கல்வி அலுவலக பொறியியலாளர் எம்.சீ.எம்.நவாஸ், பாடசாலை வேலைகள் பரிசோதகர் ரீ.எல்.எம்.இஸ்மாயில் ஆகியோரும் சென்றிருந்தனர்.

காரைதீவுக் கிராமத்தில் அதிசய தாவரம்.




இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவுக் கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு ஒன்றின் பின்புறத்தில் அதிசய தாவரம் ஒன்று திடீரென முளைத்து உள்ளது.


இது பூச்சிகளை தின்கின்ற தாவர இனத்தைச் சேர்ந்தது. சடலங்களில் இருந்து வீசுகின்ற பிண வாடையை காட்டிலும் மோசமான நாற்றம் இத்தாவரத்தில் இருந்து வீசி இருக்கின்றது. இதனால் வீட்டுக்காரர்கள் இத்தாவரத்தை வேரோடு பிடுங்கினர். நிலத்தில் புதைத்தனர்.




Tuesday, June 7

கிழக்குமாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து.




நேற்று இடம்பெற்ற அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்குமாகாணத்தில் இடம்பெறவுள்ள ஆசிரியர் இடமாற்றங்களை இரத்துச்செய்யும்படியாக ஜனாதிபதியிடம்  கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.  

உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் இடமாற்றங்களால், எதிர்வரும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.உயர்தரப் பரீட்சை மற்றும் க.பொ.த.சாதாரன தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில்  ஜனாதிபதியின் மேலதிக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்ட ஜனாதிபதி இவ் இடமாற்றங்களை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நுரைச்சோலை கண்டத்தில் நெற்செய்கைக்கு அனுமதி வழங்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்


தெ. கி பல்கலைக்களகத்துக்கு 12 மில்லியன் குவைத் தினார்கள் அன்பளிப்பு

அம்பாறையில் கடலரிப்பு : பிரதேசவாசிகள் அச்சம்

June 7, 2011  07:36 am
Bookmark and Share
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அண்மைக்காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் பிரதேசவாசிகள் மிகவும் அச்சம் தெரிவிக்கின்றனர் என நம்பத்தகு தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, ஒலுவில், கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை போன்ற கரையோர பிரதேசங்களிலுள்ள கடலோர நிலப்பரப்புகளை நாளுக்கு நாள் கடல் தனதாக்கிக் கொண்டு வருகின்றது.

அடிக்கடி கடல் கொந்தளிப்பு ஏற்படுவதனாலும் கடல் மண் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்வதனாலும் கடலரிப்பு அதிகரிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் கடற்கரையோரங்களில் வளர்ந்திருந்த அடம்பன்கொடி, இராவணன் மீசை, எழுத்தாணிப்பூண்டு மற்றும் தாழை போன்ற மரங்கள் அழிவடைந்த நிலையில் இவை இது வரை மீள நடுகைக்கு உட்படுத்தப்படவில்லை.

கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசத்தில் பாரிய பாறாங்கற்கள் போடப்பட்டிருந்த போதிலும் அதனையும் தாண்டி கடலரிப்பு ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறான கடலரிப்பு தொடருமாயின் கடற்கரைப் பிரதேசமொன்று எதிர்காலத்தில் இல்லாமல் போவதுடன் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள் தங்களது வள்ளங்களையோ இயந்திரப்படகுகளையோ தோணிகளையோ நிறுத்தி வைப்பதில் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற அச்சம் நிலவுகின்றது.

Monday, June 6

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தகுதி பெற்று சாதனை






பல்கலைகழக மானிய ஆணைக்குழு கடந்த வாரம் வெளியிட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லாரியிலிருந்து 15 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.



2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லாரியிலிருந்து சுமார் 70  மாணவர்கள் பலதுறைகளிலும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற போதிலும் பொறியியல் துறையில் ஒரே தடவையில் 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு  தெரிவு  செய்யப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுள்ளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள்ளும் இச்சாதனை  ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதே வேளை பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ்.ஏ.சர்பான் அஹமட் இ எம்.ஏ.எம்.இர்பான் மற்றும்  எஸ். எச் .எம். சப்ராஸ் ஆகிய மாணவர்கள் தேசிய ரீதியிலும் ஏனைய மாணவர்கள் மாவட்ட ரீதியிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்திறகு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லாரி அதிபர்  அல் ஹாஜ் எம். எம். இஸ்மாயில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்

Saturday, June 4

இப்படியும் கற்பிக்கலாம்.


May 27, 2011

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இவ்வாண்டு புலமைப்பாரிசில் பாரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை களப்பயணம் மூலம் அழைத்துச் சென்று கல்முனை தபாலகத்தில் கற்பிக்கப்பட்டது.

புத்தகக்கல்வியுடன் மட்டும் நின்று விடாது, மாணவர்களுக்கு அனுபவத்தின் மூலமும் கல்வியை கற்பிக்கும் நோக்கோடு
பாடசாலை அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்கள் உற்சாகத்துடன் இக்களப்பயணத்தில் ஈடுபட்டு சிறந்த விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.





Thursday, June 2

பெற்றோரை இழந்த வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவு காசோலைகள்


on Thursday, June 2, 2011

)

கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெற்றோரை இழந்த வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான கொடுப்பனவு
காசோலைகள் இன்று வியாழக்கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து அப்பிள்ளைகளின் பாதுகாவலர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் என்.ஜி.அப்துல் கமால் ஆகியோர்கள் காசோலைகளை வழங்கி வைத்தனர்.


கல்முனையில் இலவச கணணி பயிற்சி நெறிகள்


Thursday, June 2, 2011



கல்முனை பகுதி பாடசாலை மாணவர்களிடைய கணணி அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு கல்முனை விதாதா வளநிலையத்தில் இன்று இலவச கணணி பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கல்முனை விதாதா வளநிலையத்தின் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எல்.நிஸாரின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் எம்.சீ.ஹாறூன் வளவாளராகவும் கலந்து கொண்டனர்.

   இவ்வாரம் முழுவதும் நடைபெறும் இப்பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.





Wednesday, June 1

University entrance cut-off marks (Z score) of A/L 2010



University entrance cut-off marks (Z score) was released this noon and available online. The cut-off marks can be viewed at www.ugc.ac.lk. We have given the cut of marks of Ampara District.





COURSE Z.Score
MEDICINE 1.7295
DENTAL SURGERY 1.7130
VETERINARY SCIENCE 1.6559
MOLECULAR BIOLOGY & BIOCHEMISTRY 1.7087
AGRICULTURAL TECHNOLOGY & MANAGEMENT 1.5237
AGRICULTURE 1.1200
FOOD SCIENCE & NUTRITION 1.5646
FOOD SCIENCE & TECHNOLOGY 1.6091
BIOLOGICAL SCIENCE 0.9974
APPLIED SCIENCES (BIO.SC) 0.9541
ENGINEERING 1.4118
ENGINEERING  (EM) 1.3815
ENGINEERING  (TM) 1.3726
QUANTITY SURVEYING 1.3161
COMPUTER SCIENCE 1.2291
PHYSICAL SCIENCE 0.7040
SURVEYING SCIENCE 1.1881
APPLIED SCIENCES  (PHY.SC) 1.0000
MANAGEMENT 1.1929
ESTATE MANAGEMENT & VALUATION 1.7510
COMMERCE 1.1463
PUBLIC MANAGEMENT (SPECIAL) 1.8055
BUSINESS INFORMATION SYSTEMS
(SPECIAL)
1.6350
ARTS * 1.3966
ARTS  (SP) / MASS MEDIA* 1.2639
ARTS (SP) / PERFORMING ARTS * 1.3894
ARTS (SAB) - A * 1.3894
ARTS (SAB) - B * 1.4719
MANAGEMENT STUDIES (TV) - A 1.1139
MANAGEMENT STUDIES (TV) - B 1.4101
ARCHITECTURE
DESIGN (ARCHITECTURE)
TOWN & COUNTRY PLANNING 1.7686
FASHION DESIGN & PRODUCT DEVELOPMENT
INFORMATION TECHNOLOGY 1.3906
INFORMATION TECHNOLOGY & MANAGEMENT 1.7443
FACILITIES MANAGEMENT 1.4042
TRANSPORT & LOGISTICS MANAGEMENT 1.2870
LAW 1.8096
MANAGEMENT & INFORMATION TECHNOLOGY 1.2028
COMMUNICATION STUDIES * 1.3701
PEACE & CONFLICT RESOLUTION * 1.6569
AYURVEDIC MEDICINE & SURGERY 0.7414
UNANI MEDICINE & SURGERY 1.0948
SIDDHA MEDICINE 0.8639
INFORMATION & COMMUNICATION TECHNOLOGY 0.7187
HEALTH PROMOTION 1.3154
NURSING 1.3488
PHARMACY 1.5870
MEDICAL LABORATORY SCIENCES 1.6113
RADIOGRAPHY 1.5488
PHYSIOTHERAPY 1.6217
ENVIRONMENTAL CONSERVATION &MANAGEMENT 1.3656
INDUSTRIAL STATISTICS & MATHEMATICAL FINANCE 1.2603
STATISTICS & OPERATIONS RESEARCH 1.3927
COMPUTATION & MANAGEMENT 1.7229
FISHERIES & MARINE SCIENCES 1.3197
ANIMAL SCIENCE & FISHERIES 1.4609
FOOD  PRODUCTION & TECHNOLOGY MANAGEMENT 1.4711
ISLAMIC STUDIES  * 1.2515
ARABIC  LANGUAGE * 0.773
SCIENCE & TECHNOLOGY 1.0101
COMPUTER SCIENCE & TECHNOLOGY 1.2815
ENTREPRENEURSHIP & MANAGEMENT 1.3133
ANIMAL SCIENCE 0.6633
EXPORT AGRICULTURE 0.9158
TEA TECHNOLOGY & VALUE ADDITION 0.6411
INDUSTRIAL  INFORMATION TECHNOLOGY 1.1955
AQUATIC RESOURCES TECHNOLOGY 0.8695
PALM AND LATEX TECHNOLOGY & VALUE ADDITION 0.4902
HOSPITALITY, TOURISM AND EVENTS MANAGEMENT (Uwa Wellassa U) 1.2883
MANAGEMENT & INFORMATION TECHNOLOGY (SEUSL) 1.5700
COMPUTING & INFORMATION SYSTEMS 0.5550
PHYSICAL EDUCATION 1.1760
SPORTS SCIENCES & MANAGEMENT 1.1680
SPEECH & HEARING SCIENCES 1.3578
ART & SCULPTURE(UNIVERSITY OF VISUAL & PERFORMING ARTS) 0.3688
MUSIC (UNIVERSITY OF VISUAL & PERFORMING ARTS) 0.4093
DANCE (UNIVERSITY OF VISUAL & PERFORMING ARTS) 0.8241
DRAMA & THEATRE (UNIVERSITY OF VISUAL & PERFORMING ARTS)
ART & DESIGN (RAMANATHAN ACADEMY OF FINE ARTS) 0.5247
MUSIC(RAMANATHAN ACADEMY OF FINE ARTS) -0.1432
DANCE(RAMANATHAN ACADEMY OF FINE ARTS) 0.5118
VISUAL & TECHNOLOGICAL ARTS(SWAMI VIPULANANDA INSTITUTE)
0.8906
DANCE(SWAMI VIPULANANDA INSTITUTE) 0.5964
DRAMA & THEATRE(SWAMI VIPULANANDA INSTITUTE) 1.1989
TOURISM & HOSPITALITY MANAGEMENT 1.3523
MINERAL RESOURCES & TECHNOLOGY 1.0752
MUSIC(SWAMI VIPULANANDA INSTITUTE) 0.3401

-UGC (http://www.ugc.ac.lk/cutoff.html)-

கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு!



கையடக்கத் தொலைபேசிகள் மூலம் விபரங்களை பெற்று பிறப்பு இறப்பு மற்றும் விவாகப் பதிவு சான்றிதழ்களை துரிதமாக வழங்குவதற்கான செயற்திட்டமொன்றை தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு கையடக்கத் தொலைபேசி மூலம் விபரங்களை வழங்குவதன் ஊடாக பிறப்பு இறப்பு மற்றும் விவாக பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார்.
இத்திட்டத்தின்படி இச்சான்றிதழ்களைப் பெறுவதற்கு பிரதேச செயலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கான கட்டணங்கள் கையடக்கத் தொலைபேசி மூலம் செலுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.(vk;.up.-977)

Source : http://tamil.news.lk/index.php?option=com_content&view=article&id=12569:2011-04-11-04-18-40&catid=35:latest-news&Itemid=385

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு



(றிப்தி அலி)
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர்  இடைநிறுத்தி வைக்கப்பட்டமையை கண்டித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தபோது, மேற்படி இரு மாணவர்களும் கூக்குரலிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே 3 மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் பல்கலைக்கழக உப வேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவாத்தை வெற்றியளிக்காத பட்டசத்தில் வகுப்பு பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.