Sunday, June 24

கிழக்கு மாகாண சபை: உதுமாலெப்பைக்கு ஜெமீல் சவால்


ஜெய்கா திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸோ மாகாண அமைச்சர் உதுமாலெப்பையோ உரிமை கோர முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரிகளை பெற்றுக் கொண்ட இந்த அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள், பாதுகாப்பு மற்றும் இருப்பு தொடர்பில் சற்றும் அக்கறையற்ற நிலையில் அபிவிருத்திக் கோஷம் எழுப்புகின்றனர்.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீமையும் விமர்சித்து வருவதானது மிகவும் கண்டிக்கத்தக்கது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் மக்களிடம் இதுவரை கையளிக்கப்படாத சுனாமி வீடுகள்



அம்பாறை மாவட்டத்தில் 2004 ம் ஆண்டு சுனாமி பேரழிவில் இருப்பிடங்களை இழந்த முஸ்லிம்களுக்காக, சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை உரியவர்களிடம் வழங்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
சுனாமியினால் பெரும் அழிவுகளையும் இழப்புகளையும் சந்தித்த அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்காக, அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள நுரைச்சோலையில் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவின் பெயரில் அந்த நாட்டு அரசின் நம்பிக்கை நிதியத்தினால் இந்த வீடுகள் அமைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் சுனாமியின்போது வீடுகளை இழந்த முஸ்லிம் குடும்பங்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் நிரந்தர வீடுகளின்றி தற்காலிக இருப்பிடங்களிலேயே தங்கியிருக்கின்றனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஊடகவியலாளர்கள் அவமதிப்புக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மாகாண அமைச்சர்




கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் - விழா ஏற்பாட்டாளார்களினால் அவமதிக்கப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதாக கிழக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்க கூட்ட மண்டபத்தில் அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

Saturday, June 23

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு



கிழக்கு மாகாணசபை கலைக்கப்படுவதற்கு, கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபை பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே கலைக்கப்பட்டு தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும், இந்தத் தீர்மானத்திற்கு கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாகாணசபை கலைப்பிற்கு எதிராக ஆளும் கட்சியினர் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.  அரசாங்கம் உரிய முறையில் நிதி ஒதுக்கீடுகளை செய்யாத காரணத்தினால் மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என ஆளும் கட்சி உறுப்பினர் புஸ்பராஜ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவினை ஊடகவியலாளர் பகிஷ்கரித்து வெளியேற்றம்



கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் ஏற்பாட்டாளர்களால் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி, நிகழ்வினைப் பகிஷ்கரித்து விட்டு குறித்த இடத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்தனர்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ஆரம்பாகியது.

Friday, June 22

அம்பாறை மாவட்ட உயர் பதவிக்கு சிறுபான்மையினர் புறகணிப்பு: ஹஸன் அலி கடிதம்


F.M.பர்ஹான்: இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளராக இதுவரை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்ததவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர் முதன்முறையாக இப்பதவிக்கு கடந்த ஜனவரிமாதம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எம். அப்துல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் நான்கு மாத இடைவெளிக்குள் அவரை அங்கிருந்து அகற்றிவிட்டு மீண்டும் ஒரு பெரும்பான்மை சமூகத்தவரை சேர்ந்தவர் நியமிக்கப் பட்டுள்ளார் . இந்த நியமித்ததைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான எம்.ரீ. ஹஸன் அலி பிரதிநிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்,
அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

அக்கரைப்பற்றில் உயிர்பலி எடுத்த வாகனத்தை பொது மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம்

உயிர்பலி எடுத்த வாகனத்தை பொது மக்கள் தீ வைத்து எரித்ததால் பதற்றம்!அக்கரைப்பற்று - வம்மியடி பிரதேசத்தில் கொள்கலன் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் கொள்கலன் ரக வாகனத்தை தீயிட்டு எரித்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்று கொண்டிருந்த கொள்கலன் ரக வாகனம் அக்கரைப்பற்றில் இருந்து குடியிருப்பு பிரதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி வம்மியடிச் சந்தியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் துடுப்பை பிடித்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் கீழே வீழ்ந்த நிலையில் எதிரேவந்த கொள்கலன் அவர் மீது மோதியுள்ளது.

Thursday, June 21

அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சனிக்கிழமை மின் வெட்டு!

-சிஹாப்- (metromirror)
அம்பாரை கிறிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் அம்பாரை பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் கல்மடுவ, ஹிங்குராண, தமண, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, தொம்பககாவெல, அம்பாரை நகர், கெமுனுபுர, சுதவல்ல, கொண்டவட்டுவான், பரகாகல, ஹிமிதுராவ, கலஹிற்றியாகொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, பியங்கல, 69ம் சந்தி, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட, பதியதலாவ, நவகங்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம் கொலணி, 13ஆம் கொலணி, 5ஆம் கொலணி, 17ஆம் கொலணி, 21ஆம் கொலணி ஆகிய பிரதேசங்களிலேயே அன்றைய தினம் மின்சாரம் தடைப்படவுள்ளது.

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை பரீட்சார்த்தம் :விரைவில் சேவை ஆரம்பம்(பட இணைப்பு)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு இன்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்

கல்முனை முதல்வரின் ஆலோசகர் பீர்முஹமமத் வெளியேற்றம்; புதிய ஆலோசகராக ரஹ்மான் நியமனம்!




கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் ஆலோசகராக செயற்பட்டு வந்த முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.பீர்முஹம்மது அப்பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து முதல்வரின் புதிய ஆலோசகராக ஏ.ஏ.றகுமான் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் நேற்று புதன்கிழமை கல்முனை மாநகர சபையில் வைத்து முதல்வரினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர், சாய்ந்தமருது மக்கள் வங்கி முகாமையாளர் எம்.எம்.ஹனிபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Wednesday, June 20

கிழக்கின் அடுத்த முதலமைச்சர் அலிஸாஹிர் மௌலானா - மஹிந்தானந்த அளுத்கமகே





இன்னும் ஒரு சில மாதங்களில் அலிஸாஹிர் மௌலானா அவர்கள்தான் கிழக்கின் முதலமைச்சராக வருவார். கிழக்கின் அடுத்த முதலமைச்சராகப் போகும் அலிஸாஹிர் மௌலானாவுக்கு ஆதரவளிக்கத்தான் ஜனாதிபதி எங்களை மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்தார்இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் ஒரு வருடப்பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்திப் பணிகளின் தொடக்க விழா கடந்த சனிக்கிழமை பகல் ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.

காத்தான்குடியின் மிகப்பெரும் பள்ளிவாசல் - ஆசியாவிலேயே பெரிய ''டோம்''



நன்றி : kattankudi.info எம்..சீ.எம்.ஜெலீஸ்

ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் அமைப்பதற்கான உடன்படிக்கை இன்று புதன்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்..எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும், பள்ளிவாயல் நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு, வடக்கு பட்டதாரிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி நியமனங்கள் வழங்க முன்வந்தமைக்கு பாராட்டு


F.M.பர்ஹான்: கிழக்கு மற்றும் வடமாகாண பட்டதாரிகளுக்கு எவ்வித பாகுபாடுமின்றி நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையை இலங்கை சுதந்திர பட்டதாரி சங்கம் தமது பாராட்டை தெரிவிக்கின்றது. இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டம் மிக வேகமாக அரசாங்கத்தினால் முன்னெடுத்து செல்லப்படுகின்றது. இலங்கை சுதந்திர பட்டதாரி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே இவ்வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

கல்முனை மாநகர சபை தனது வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்து


கல்முனை செய்தியாளர், F.M.பர்ஹான்:  கல்முனை மாநகர சபையானது தனது வரு மானத்தை அதிகரிப்பதற்கான செயற்பாட்டை துரிதப்படுத்த்தும் முகமாக இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இன்று (19.06.2012) முதல்வர் செயலகத்தில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆசிய பவுன்டேசன்  அனுசரணையில் இடம்பெற்றத இந்நிகழ்விற்கு மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கணக்காளர் எல். ரீ. சாலிதீன் ஆசிய பவுன்டேசன் கிழக்குமாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதில் அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை


கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் சாய்ந்தமருது  பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை ஒன்று நாளை வியாழகிழமை இடம்பெறவுள்ளது . பாடசாலை ,மற்றும் மதரசா மாணவ ,மாணவியருக்கான இந்த அரபு எழுத்தணி பயிற்சிப் பட்டறை  சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் கலை 8.30 முதல் இடபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த அரபு எழுத்தணி பயிற்சி பட்டறையில் பாடசாலை ,மற்றும் மதரசாவின் தரம் 4 இக்கு மேல் கல்விகற்கும் அரபு எழுதவும் , சித்திரம் வரையவும் முடியுமான மாணவ, மாணவியர் பங்கு பற்றமுடியும், இதில் பாடசாலைகள் , மதரஸாக்கள் ஆகிய வற்றில் இருந்து மேற்படி தகமைகளை கொண்ட தலா மூன்று மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று  சாய்ந்தமருது பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது .