கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நவம்பர் 14 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு சிகிச்சைக்கென விசேட பிரிவொன்று வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்நிகழ்விற்கு வைத்தியசாலையின் வைத்தியர்கள் , தாதியர்கள், ஊழியர்கள், உத்தியோகஸ்த்தகர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினம் மற்றும் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தி என்பவற்றை முன்னிடடு தயட்ட செவன திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் 11 இலட்சம் பயன்தரு மரக்கன்றுகள் இன்று நடப்பட்டன. இதன் பிரகாரம் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பிரதேச செயலாளர்களின் தலைமையில் மரநடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கம் நடாத்தும் பத்தொன்பது வயதுக்கு கீழ்பட்ட அகில இலங்கை ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியின் இரண்டாம் கட்டம் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்தில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.





