Wednesday, January 30

மக்கள் நலன்புரி தேவைக்கென காணி வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்


சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்தகர் சங்கத்தால் மக்கள் நலன்புரி தேவைக்கென சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் வொலிவேரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் 40 பேர்ச் காணியை வழங்குமாறு கோரி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமிடம் மகஜர்
ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எச்.நஸீர் , செயலாளர் றிஸ்தி சரீப் மற்றும் கணக்காய்வாளர் எம்.எப்.அப்துல் பாஸித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது



தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்டியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில்  கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர் 

Monday, January 28

அமைச்சரவை மாற்றத்தில் ரவூப் ஹக்கீமின் கோரிக்கை நிராகரிப்பு!


Hakeem (1)அமைச்சரவை மாற்றத்தின் போது தான் வகித்து வருகின்ற நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறொரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கை ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அவர் உள்ளடக்காப்படவில்லை.
அதேவேளை பஷீர் சேகுதாவூதை அமைச்சரவை அமைச்சராக நியமிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கருத்துக் கோரப்பட்ட போது அதனை அவர் வன்மையாக ஆட்சேபித்திருந்தார்.

சம்மாந்துறையில் ஆட்டோ சாரதி கழுத்து வெட்டிக் கொலை!


Murderசம்மாந்துறை மல்லிகைத்தீவு வீதியல் மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரின் கைவிரல்கள்களை வெட்டி மோதிரம் மற்றும் கையடக்கத் தொலைபேசி, என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மல்வத்தை 2ம் பிரிவு புதுநகரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான சீனித்தம்பி பிரேமநாதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் கலாசார கண்காட்சி


from: Kattankudi.info

Poster2இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாற்றை பாதுகாத்து பேணும் நோக்கில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதிஅமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களால் காத்தான்குடியில் அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதன் ஓர் அங்கமாக எதிர்வரும் 2013 பெப்ரவரி மாதம் 1ம் 2ம் 3ம் திகதிகளில் கலாசாரக் கண்காட்சி ஒன்று பிரதேசசெயல ககலாசார பிரிவினால் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் காலை 9.00மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இக் கண்காட்சியில் வரலாற்றுப்பழைமைவாய்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகள், வீட்டுபாவனைப்பொருட்கள்,  நாணயங்கள்,  கல்வெட்டுக்கள், பாரம்பரியவிவசாயம், மீன்பிடிகைத்தொழில்கள், மருத்துவம், சடங்குகள், தொடர்பாடல் முதலியகருவிகள் , உபகரணங்கள், வாழ்வியலை புலப்படுத்தும் அம்சங்கள் என்பன இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் இக்கண்காட்சியினை கண்டுகளிக்க வருமாறு அனைவரையும் காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார பிரிவினர் அன்புடன் அழைக்கின்றனர்
Poster2
A

Sunday, July 8

அழுத்தங்களுக்கு அடிபணிந்து சேவையாற்றவேண்டியுள்ளது - பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில்


சம்மாந்துறை பிரதேச இளநிலைப் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் இரண்டாவது தடவையும் உபவேந்தராக தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்கும் நிகழ்வு  06. 07.2012ல் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பேராசிரியர்; எஸ்.எம்.எம். இஸ்மாயில் சுமார் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளம் இரத்தங்களோடு போராட வேண்டியுள்ளது. அத்துடன், நூற்றுக்கு மேற்பட்ட கல்விமான்களோடு எங்களது கருத்துக்களை மெய்பித்து அதனை செயற்படுத்திக் காட்டவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. அதற்கு மேலாக நிருவாக ரீதியான சில அணுகுமுறைகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அத்துடன் அங்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களோடு ஒரு இயல்பு நிலையான தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. இதற்கு மேலாக, சமூக அழுத்தங்கள் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மேலாதிக்க செயற்பாட்டாளர்களின் அழுத்தங்கள் போன்றவற்றுக்கு நாங்கள் அடிபணிந்து அல்லது அவர்களது அழுத்தங்களின் மத்தியில் தான் தொழிலாற்ற வேண்டியுள்ளது.

Saturday, July 7

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றுபட்டு செயற்பட மூன்று முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

Rauf Hakeem
கிழக்கு மாகாண சபை தேர்தலில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்று பட்டு செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளன.
நேற்று (வெள்ளிக்கிழமை 06.07.2012) மாலை நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் நடை பெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபை – யுனெப்ஸ் ஆகியன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடல்



666கல்முனை மாநகர சபையானது யுனப்ஸ் நிறுவனத்துடன் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ செயற்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றை யுனப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நேற்று கைச்சாத்திட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே. லியாகத் அலி,  யுனப்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட செயற்திட்ட முகாமையாளர் வி.சீலியா மாகர்ஸ், யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் நிபுணர் சி.சிவா, யுனப்ஸ் நிறுவனத்தின் திண்மக்கழிவு முகமைத்துவ பிரிவின் செயற்பாட்டு முகாமையாளர் குருபரன், முதல்வரின் செயளாலர் இன்சாட் மற்றும் மாநகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவு பொறுப்பாளர் என்.எம்.அக்றம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுபான அனுமதி பத்திரம் கோரினேனா? என்னுடன் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல் வாதிகளினால் பரப்பப்பட்ட கட்டுக் கதையே என்கிறார் பைஸால் காஸிம்!


மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காஸிம் அவர்கள் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது;
பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொத்துவிலில் உள்ள ரெஸ்டுரன்ட், ஹோட்டல்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் வழங்குமாறு அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் கோரிகை விடுத்ததாக சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.
ஏனெனில் குறித்த செய்திகளை மையப்படுத்தி என்னை மட்டுமல்லாமல் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒருதலைப்பட்சமான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களும் விமர்சனமும் எமது கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் எனது சுயகௌரவத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி இருப்பதுடன் முஸ்லிம் சமூகத்திற்கு கூட பாரிய இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

Friday, July 6

கிழக்கு மாகாண சபையின் ஆட் சியை நாம் கைப்பற்றுவோம் : TNA






கிழக்கு மாகாண சபையின் ஆட் சியை இம்முறை தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கைப்பற்றும் அதற் கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கி அர்ப் பணிப் போடு பாடு படும் ௭ன்று தமிழ் தேசியக் கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரிய நேத்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்துக் கேட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் மேலும் தெரிவித்ததாவது, நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்த வரை இது மிக முக்கியமான தேர்தலாகும். ஆகையால் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மிக முக்கியமான தேர்தலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைய வுள்ளது.

சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் முபாறக் மௌலவி காலமானார்!


சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி இன்று மாலை தனது 56 வது வயதில் கொழும்பில் காலமானார்.
ஜனாசா நாளை காலை சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்படும்.

கல்முனையில் “திறமைக்கு மரியாதை” விருது வழங்கும் விழா


121


சாய்ந்தமருது கலை, கலாசார மற்றும் கல்வி அபிவிருத்திக்கான அமையம் ஏற்பாடு செய்துள்ள “திறமைக்கு மரியாதை’” விருது வழங்கும் விழா எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, எஸ்.ஜீ.ஏ. நிறுவனத்தின் தயாரிப்பில் எஸ்.ஜனூஸின் எழுத்து ஆக்கத்தில் உருவான “வை திஸ் கொலவெறி” குறும்படம் வெளியிடப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும்- மைத்திரிபால சிறிசேன


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே தேர்தலில் போட்டியிடும் ௭ன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார் .
கிழக்குத் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா ௭ன்று கேள்வியெழுப்பப்பட்டபோது . அதற்கு மேலும் பதிலளிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகும். அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கூட்டணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தே போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார் .

Thursday, July 5

சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் சிரமதான நிகழ்வு


75765ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியின் கீழ் யுனொப்ஸ் நிறுவனம் கல்முனை மாநகர சபையுடன் இணைந்து சாய்ந்தமருது திண்மக்கழிவு முகாமைத்துவ ஒத்துழைப்புக் குழுவும் இல்ஷாம் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் இடம்பெற்றது.
இதில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய மாநகர சபை உறுப்பினருமாகிய அப்துல் பஷிர் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர்,சாய்ந்தமருது சகாதார வைத்திய அதிகாரி சகியா இஸ்ஸடீன், அதிபர் எம்.நசார் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜவ்பர், இல்ஹாம் இளைஞர் கழகத்தலைவர் ஏ.எம். நவ்பான் சாய்ந்தமருது சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பா. உ.: ACJU க்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: பஷில்


ஏ.அப்துல்லாஹ் : மதுபான விற்பனை அனுமதிப் பத்திரம் கோரிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்: ஜம்இயத்துல் உலமாவுக்கு தெரிந்தால் கதை கந்தலாகி விடும்: அமைச்சர் பஷில் பதில் : காலத்திற்குக் காலம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலரின் நடவடிக்கைகள் வெட்கப்படும் வகையில் அமைந்திருப்பது வேதனைக் குரியதாகும். இவர்களின் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்தினை தலைகுனியச் செய்வதாகவும் அமைந்திருக்கின்றன. நாம் இத்தகையவர்களையா நமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்திருக்கின்றோம் ௭ன்று சமூக ஆர்வலர்கள் பலரும் நொந்து கொண்டுள்ளனர் .