
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் பேரவையின் எற்பாட்டில் நாளை டிசம்பர் 1ம் திகதி முதல் 4 ம் திகதி வரை தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்குமான மாபெரும் பண்பாட்டு விழாவும் கண்காட்சியும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று (2011.11.30) பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்றது. இதில் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரப் மாணவர் நலன்புரிப் பிரிவுப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸ்தபா, திட்டப் பணிப்பாளர் கே.எம். முபாறக் மாணவப் பேரவைச் செயலாளர் ஆர.எம். சஞ்சீவ பண்டார, கலைப் பிட மாணவர் பேரவைத் தலைவர் எம்.எஸ்.எம். சப்ரீன் ஆகியோரும் கலந்து கொண்டு இவ்விழாத் தொடர்பாக விளக்கமளித்தனர்.