தெயட்ட கிருள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல்
நடும் நிகழ்வு சாய்ந்தமருது வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்
எம்.எஸ்.உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர்
ஏ.எம்.றிஸ்வி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய
அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மற்றும்
பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், வைத்தியசாலை
அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.