Wednesday, November 30

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் சமயத்தலைவர்களுக்கான ஒன்றுகூடல்

சமாதானத்திற்கான இலங்கைச் சமயங்களின் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளை சமயத்தலைவர்களுக்கான முதலாவது ஒன்றுகூடலை அம்பாறை வித்யாலங்கார பிரிவேனாவில் நடாத்தியபோது பேரவையின் தலைவர் டாக்டர். எம்.ஜ.எம்.ஜெமீல் கிழக்கு மாகாண சங்க நாயக்கர் கலாநிதி கிரிந்திவல சோமரத்ன தேரர் ஆகியோர் உரையாற்றுவதையும் சமயத்தலைவர்கள்
இருப்பதையும் படங்களில் காணலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெள்ளி விழா (படங்கள் இணைப்பு)

November 30, 2011.... AL-IHZAN Local News
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சருக்கு பெருந்தெருளான மக்கள், பிரமுகர்கள் அஞ்சலி.

Wednesday, November 30, 2011

முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 85ஆவது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் இரவு 9.25 மணிக்கு இறையடி சேர்ந்தார்.இவர் கடந்த 24ஆம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

கிழக்கிலங்கையில் மதிப்புக்குரிய கல்விமானாக திகழ்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரினால் ஏடு துவக்கப்பட்ட மாணவராக தனது ஆரம்பக் கல்வியை 1933ஆம் ஆண்டு சம்மாந்துறை அரசினர் ஆண்கள் பாடசாலையில் கற்றார். பின்னர் 1934ஆம் ஆண்டு இடைநிலைக் கல்வியை தொடர்வதற்காக மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியிலும், உயர்தரக் கல்வியினை பெற்றுக் கொள்ள 1943 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு சென்ற இவர், 1946ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று 1947ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைகழகத்துக்கு கலைத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 1950ஆம் ஆண்டு பொருளாதாரப் பட்டதாரியாக பட்டம் பெற்றார்.

இவர் கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற முத்திரையினையும் பதித்துள்ளார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


     சொத்து பிரகடனம் செயத் தவறிய கல்முனை மாநகர சபை உறுப்பினரான  அப்துல் ரஹீம் அமீர் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்  ஆணையாளரினால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுள் இருவர் மாத்திரமே சொத்து பிரகடனம் செய்ய வில்லை .

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்

கல்முனையில் இருந்து 185 ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம்



 
 
கிழக்கு மாகாண பாடசாலைளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை சீர் செய்யும் நோக்கில் கல்முனைக் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 185 ஆசிரியர்கள் கல்முனை கல்வி மாவட்டத்தை விட்டு வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கல்முனை கல்வி வலயத்திலிருந்து 126 ஆசிரியர்களும், சம்மாந்துறைக் கல்வி வலயத்திலிருந்து 43 ஆசிரியர்களும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து 16 ஆசிரியர்களும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு


(சம்மாந்துறை நிருபர் - ஏ.ஜே.எம்.ஹனீபா)
கடந்த 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலை கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு நிரந்தர அபிவிருத்திகளோ, பல்கலை கழகத்துக்கு தேவையான கட்டிடங்களோ உருவாக்கப்படாமல் இலங்கை நெற் சந்தைப்படுத்தும் சபையினால் அரிசி ஆலைக்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்களிலேயே உள்ளக மாற்றங்களை செய்து இன்று வரைக்கும் இயங்கி வருகின்றது.
இதனால் இப் பல்கலை கழகத்தின் எதிர்காலம் தொடர்பாக இப்பிராந்தியத்திலுள்ள பொதுநல அமைப்புக்கள், பொதுமக்கள் மற்றும் இங்கு கற்ற பழைய மாணவர்கள் மத்தியிலும் பாரிய சந்தேகங்களும், அச்சமும் ஏற்பட்டிருந்தது என இலங்கை தென் கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல்
தெரிவித்தார்.

சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் காலமானார்


Slide2(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் இன்று(29) தனது 85வது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இரவு 9.25 மணிக்கு மரணமாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் கடந்த 24ம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

Friday, November 25

கடும்மழையினால் மூழ்கியுள்ள மருதமுனைப் பிரதேசம்.


கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடும் மழைகாரணமாக கல்முனை பிரதேசத்தின் பல இடங்கள் நீரில் தாழ்ந்து வருகின்றது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை மேட்டுவட்டைப் பிரதேசத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சிகளை படங்களில் காண்கின்றீர்கள்.

கல்முனை வர்த்தக நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதில் புதிய நடைமுறை; லஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி!


Slide2கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில் இருந்து வந்த குறைபாடுகள் களையப்பட்டு தற்போது முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது.

கல்முனை மாநகரதுக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வர்த்தக நிலையங்கள் தொழில் நிலையங்களுக்கான வியாபார அனுமதிப் பத்திரம் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் என்பன முதல்வரின் நேரடி பரிசோதனையின் பின்னர் வழங்கப்படுகின்றன. கடந்த காலத்தில் இவ்வாறான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கு சிலர் தகாத பெறுவனவுகள் பெற்று வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னரே முதல்வர் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கி உரிய இடத்துக்கு சென்று அனுமதிப் பத்திரங்களை வழங்கி வருகின்றார்.

ஒலுவில் பிரதேசத்தில் கடல் கொந்தளிப்பு!


ஒலுவில் பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக ஒலுவில் துறைமுக வெளிச்ச வீடு பகுதி (Light House) கடலரிப் புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து வெளிச்ச வீட்டினை பாதுகாப்பதற்காக ஒலுவில் துறைமுக ஊழியர்கள் மண் மூடைகளை அடுக்கி வருகின்றனர். அதனையும் கடலலைகள் அடித்துக்கொண்டு செல்கின்றன.
ஒலுவில் துறைமுகத்தை அண்டியுள்ள ஒலுவில் கரையோரப் பிரதேசங்கள் சுமார் 100 மீற்றர் தூரம் கடல் குடியிருப்புப் பிரதேசங்களை (ஊரை) நோக்கி சில தினங்களுக்குள் நகர்ந்துள்ளன.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் வெள்ள அபாயம் தொடர்பில் மேயருடன் கலந்துரையாடல்


 
தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானம், மாணவர் விடுதி மற்றும் வகுப்பறை கட்டிடங்களை அண்மித்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்கிக் காணப்படுகிறது இதன்காரணமாக மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையால் விசேடமாக பாடசாலையில் தங்கி கற்கும் விடுதி மாணவர்கள் சுகவீனம் மற்றும் தோற்று நோய்களுக்கு உள்ளாவதனால் பாரிய சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய அபாயம் நிலவும் இவ்வேளையில் இந்நிலைமையை கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு பாடசாலையின் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஆசிரியர் குழுவொன்று
மாநகர சபையின் மேயரை சந்தித்தது இதன் போது கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.நசார்டீன், எம்.சாலித்தீன் ஆகியோரும் இச்சந்திப்பில் இணைந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பதவிக்கு புதிதாக விண்ணப்பம் கோரல்


கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் கணிதம். ஆங்கிலம் பட்டதாரிகளும் ஆங்கில டிப்ளோமாதாரிகளும் சேர்;த்து கொள்வதற்கு விண்ணப்பம் கோரியுள்ளதாக கிழக்கு மாகாண அரச சேவை ஆணையாளர் சபையின் செயலாளர் எச்.ஈ.எம். டப்லியூ.பீ. திசாநாயக்க தெரிவித்தார்.

போட்டிப் பரீட்சையின் மூலம் இந்த ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வயது 18- 45 வரையில் உட்பட்வர்களாக இருத்தல் வேண்டும். கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதியிடமாக் கொண்டவர்களாக இருத்தல் அவசியம்.

Thursday, November 24

கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்திக்க பிரதி மேயர் நிஸாம் காரியப்பர் உறுதி!

Slide2கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நேற்று புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார்

காஸ்வின், கேரளா, மலேசியா மாநிலங்களுடன் கிழக்கு மாகாணத்தை இணைத்து கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு திட்டம்; மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் முன்மொழிவு


Jameelகிழக்கு மாகாணத்தை ஈரான் நாட்டின் காஸ்வின், இந்தியாவின் கேரளா மற்றும் மலேசியா நாட்டின் மலாக்கா ஆகிய மாநிலங்களுடன் இணைத்து கிழக்குமாகாணத்தின் கல்வி வர்த்தகம் கைத்தொழில் தொழிழசார் கல்வி, தகவல் தொழிநுட்பம் சுயதொழில் முயற்சி மற்றும் மொழியாற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் முன்மொழிந்துள்ளார்.

நிந்தவூரில் இரும்பினால் தாக்கப்ட்டவர் வபத்தானார்




வீதியில் சைக்கிளில் சென்ற ஒருவருக்கு எதிரே ஓட்டோவில் வந்த மூவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது. ஆட்டோவில் வந்தவர்கள் இரும்புக்கம்பியால் தாக்கியதில் சைக்கிளோட்டி மரணமானார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நிந்தவூர் 13 ஆம் பிரிவைச்சேர்ந்த இப்ராலெவ்வை அபுல் ஹசன் (வயது46) என்ற குடும்பஸ்தரே மரணமாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,