Saturday, March 30

அக்கரைப்பற்றில் வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது - ஒருவர் வபாத்



(ADT) அக்கரைப்பற்று, ஆலின் நகர் பிரதேசத்தில் அயலவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அயலவர்கள் மூவருக்கிடையே நேற்று (29) இரவு 12.30 மணியளவில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 
இதன்போது இருவர் சேர்ந்து ஒருவரை தாக்கியுள்ளனர்.  இதன் காரணமாக காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று அதார வைத்தியசாலையில் நேற்று இரவு உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.  எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (30) அதிகாலை உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் 42 வயதான சுலமா லெப்பை ஜெலில் என தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் நிந்தவூர் பள்ளிவாசல்களுக்கு நிதி உதவி


"தயட்ட கிருள" திட்டத்தின் கீழ் வணக்கஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் தெரிவு செய்யப்பட்ட 13 பள்ளிவாசல்களுக்கு சுமார் 48 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டன.
நிந்தவூர் சமூக  சேவை  அபிவிருத்தி நிலையத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஹாஜியாணி RU அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அல் ஹாஜ் MCM  பைசால் காசிம் அவர்களினால் பள்ளிவாசல்களுக்கான நிதிக்கொடுப்பனவுக்கான ஆவணங்கள்  பள்ளிவாசல் தலைவர்களிடம் வழங்கப்பட்டது. 

மட்டக்களப்பில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை - வியாபாரிகள் விசனம்


மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் அங்காடி வியாபாரத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அங்காடி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக அங்காடி வியாபாரிகளில் ஒருவரான ஹயாத்து முகம்மது முகம்மது பாறுக் என்பவர் தெரிவிக்கையில்
நான் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பஸ் நிலையத்திற்கு முன்னால் மாநகர ஆணையாளர் திரு நவநீதன் அவர்களின் காலம் தொடக்கம் அங்காடி வியாபாரம் செய்து வந்தேன.; அத்துடன் என்னைப்போன்று சுமார் பத்திற்கும் மேற்பட்ட அங்காடி வியாபாரிகள் அவ்விடத்தில் தினமும் வியாபாரம் செய்து வந்தனர்.

Friday, March 29

அஸாத் சாலிக்கு இருக்கும் தைரியம் ஏன் முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை - ரஸ்ஸாக் (ஜவாத்) கேட்கிறார்.

எந்தவித அதிகாரமும் அற்ற அசாத் சாலிக்கு இருக்கும் தைரியங்களும், உணர்வுகளும் ஏன் முஸ்லிம் தலைமைகள் என்று கூறி தம்பட்டம் அடிப்பவர்களுக்கு இல்லை  என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ.ரஸ்ஸாக் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஏ.சி.யுனைட் தலைமையில் கல்முனையில் நடைபெற்றன. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Thursday, March 28

மதங்கள் மீதான ஒருசிலரின் மனவருத்தமே மதக்குரோதங்களுக்கு காரணம் - கல்முனை விகாராதிபதி



இன, மத பேதமின்ற பல வருடங்களாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த சிங்கள, முஸ்லிம்களிடையே தற்போது தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு காரணம் தங்களது மதங்கள் குறித்தான ஒருசிலரின் மனவருத்தமே என்று கல்முனை சுபத்திராம ராம மகா விகாரையின் விகாராதிபதியும் அம்பாறை மாவட்டத்தின் சர்வம சம்மேனத்தின் உபதலைவரும் சமதானத்திற்கான பேரவையின் அம்பாறை மாவட்ட உபதலைவருமான ரன்முத்துகல சங்கரத்ன தேரர் துருவம் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; தங்களது மதத்தின் மீதுள்ள மனவருத்தத்தினால்  வீதிக்கு வந்து மத்த மதங்களைப் புண்படுத்தி போராடுவதற்கு நாங்கள் தயாராகவில்லை. இவர்கள் தங்களது மதங்கள் குறித்து மனவருத்தப்படத் தேவையில்லை. தங்களது மதத்தை மதித்து, மற்ற மதத்துக்கும் மதிப்பளித்து போராட்டத்தில் ஈடுபடாமல் நாட்டில் ஒற்றுமையாக வாழவேண்டும். 
இலங்கை ஒரு பெளத்த நாடு. இதனைக் காப்பாற்றுவது பெளத்தர்களின் கடமையாகும். ஆனால், இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் மட்டும் இதர மதத்தவர்களும் அவர்களது மதங்களை பாதுகாக்க வேண்டும். அது அவர்களது உரிமை. இலங்கையில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களைப் பாதுகாப்பதற்கு உரிமை இருக்கின்றது. அதற்காக, தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக ஏனைய மதங்களை குழப்பி, அவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதனை பெளத்தமதம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் இனத்தைக் குழப்பி, மதத்தைக் குழப்பி அதனூடாக தீர்வுகாண முற்படக்கூடாது. நான் ஒரு பெளத்த தேரர் என்ற வகையில் தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளை நினைத்து வருந்துகிறேன். முஸ்லிம்கள் எல்லாவற்றையும் மறந்து நாட்டின் நலனை கருத்திற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக வாழ வழிசமைக்க வேண்டும். பிரச்சினைகள் ஏற்படுமிடத்து எல்லா மதத் தலைவர்களும் ஒரே மேசையில் அமர்ந்து அதற்கான தீர்வு குறித்துப் பேசவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
(முஹம்மட் பிறவ்ஸ்)
 
நன்றி: துருவம் 

'தேசத்துக்கு மகுடம்' கண்காட்சியை ஏன் தென்கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள்..?



 அம்பாறையில்  'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி கடந்த சனிக்கிழமை மாலை ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு  இன்று வியாழக்கிழமையுடன் 6 தினங்கள் கடந்த நிலையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்  இந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம் கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பட்டதாரி பயலுனர்களை பயிற்சிக்கு இணைப்பதில் பாராபட்சம்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அம்பாறையில் பாடசாலைகளை நோக்கி படையெடுத்த பெற்றோர்கள் (படங்கள்)


அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களை வற்புறுத்தி, அடாத்தாக 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இன்று வியாழக்கிழமை காலை ராணுவத்தினர் ஈடுபட்டதையடுத்து பாடசாலைகளில் இன்று 28-03-2013 குழப்பமானதொரு சூழ்நிலை காணப்பட்டது. 
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முக்கிய சில பாடசாலைகளுக்கு இன்று காலை சென்ற ராணுவத்தினர் - அப்பாடசாலை மாணவர்களை அம்பாறையில் இடம்பெறும் 'தயட்ட கிருள்ள' காண்காட்சிக்கு அழைத்துச் செல்லப் போவதாக அதிபர்களிடம் கூறியுள்ளனர். 
ஆனாலும், பெற்றோர்களின் அனுமதியின்றி மாணவர்களை அவ்வாறு அனுப்பி வைக்க முடியாது என்று குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் கூறியதாகத் தெரியவருகிறது.

கண்காட்சியை பார்வையிட வருமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு!


sri-lankan-north-east-muslims
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைப் பார்வையிட அச்சமின்றி வருமாறு முஸ்லிம் மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
கண்காட்சிக்கு வரும் சகல மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்..

அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட தினமும் பெருமளவு மக்கள் வருகை தருகின்றனர்.இங்கு வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட செல்லும் முஸ்லிம்களை சிலர் அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சி பூமியில் பொலிஸ் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமின்றி கண்காட்சியை பார்வையிட வருமாறும் அவர் பொது மக்களை கோரியுள்ளார்.

பயமுறுத்தல்களுக்கும் பொய் பிரசாரங்களுக்கும் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, March 26

ஹர்த்தாலின்போது ரயர் எரித்த இருவருக்கு விளக்கமறியல்: பஸ் மீது கல்லெறிந்த ஆசிரியர் கைது

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஹர்த்தாலின் போது வீதியில் ரயர் வைத்து எரித்து அமைதிக்கு பங்கம் விளைவித்த இருவரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.

நேற்று மாலை குறித்த நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

தேசத்துக்கு மகுடம்: முஸ்லிம்கள் புறக்கணிப்பு குறித்து அதிகாரிகள் ஆராய்வு


தேசத்தற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு முஸ்லிம்கள் செல்லாதது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

அம்பாறையில் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.

இக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் மூன்று தினங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் எவரும் இக் கண்காட்சியினை பார்க்க செல்லாததால் கண்காட்சி ஏற்பாட்டாளர்களும், பொலிஸ் அதிகாரிகளும் முஸ்லிம்கள் இக்கண்காட்சியினை பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

இது விடயமாக உயரதிகாரிகள் பலரிடமும் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

சாதரண பொஸன் நிகழ்ச்சியினை கூட பார்ப்பதற்கு பெருமளவில் செல்லும் முஸ்லிம்கள் ஏன் இந்த தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை பார்ப்பதற்கு செல்லவில்லை என்று விணா எழுப்பப்படுகின்றது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி - காட்சிக்கூடத்தை திறந்தார் அமைச்சர் அதாஉல்லா


அம்பாரையில் நடைபெறும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினதும் அதன் கீழ் இயங்கும் இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தினதும் காட்சிக் கூடங்களை தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருக்கும் ஆவணங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். 
இலங்கை உள்ளுராட்சி நிறுவகத்தின் காட்சிக் கூடத்தில் உள்ளுராட்சி சபைகளின் நிதி, நிர்வாகம் மற்றும் சட்டப்புத்தகங்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் காட்சிக்கூடத்தில் அமைச்சினால் நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திட்டங்கள் சம்பந்தமான விடயங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

காத்தான்குடி குர்ஆன் சதுக்கத்திற்கு ஈரானிலிருந்து மாபிள்கள் இறக்குமதி


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வீதியை அழகுபடுத்தும் விஸேட வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்சியின் பயனாக மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிராதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி குட்வின் சந்தி குர்ஆன் சதுக்கமாக மாற்றம் பெற்று வருகின்ற அதே வேளை அங்கு பாரிய அளவில் மிகவும் எழில்மிக்க சுற்றுவட்டம் (ரவுண்ட போட்) நிறுவப்பட்டு வருகின்றது. 

தயட்டகிருலவை முன்னிட்டு கிழக்கில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார்.


இதனால் எதிர்வரும் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை ரீதியாக நடத்தப்படும் முதலாம் தவணை பரீட்சைகளை எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்கும்படி அறிவுறுத்தப்படுள்ளது என எம்.ரீ.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளினை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பாடசாலை மாணவர்கள் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட முடியும் எனவும் மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

தயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் அம்பாறையில் மூவினங்களையும் சேர்ந்த 165 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (2013.03.24) அம்பாறை ஆரியவன்ச ஹோட்டலில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறிப்பிட்ட குடும்பங்களுக்கான வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கி வைப்பதையும், அருகில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரத்ன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.