Monday, July 1

நாவலடியில் அந்நூர் பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது.


10(1)(1)
மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
 .
பள்ளிவாசலில் நேற்று இரவு இஷாத் தொழுகை முடிந்து பள்ளிவாயலை இரவு 09 மணியளவில் மூடிவிட்டு சென்ற பின், இன்று காலை  பள்ளிவாயலில் கடமை செய்பவர் சுபஹ் தொழுகைக்காக காலை 04 மணியளவில் பள்ளிவாயலுக்கு வந்த போது பள்ளிவாயல் உடைந்து காணப்பட்டதாக இப் பள்ளிவாயலில் கடமை புரியும் மௌலவி எச்.எம்.இர்பான் தெரிவித்துள்ளார்.
 .
பள்ளி வாயலில் உள்ளுக்கு இருக்கும் உண்டியலும், வெளியில் இருக்கும் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதுடன் அலுமாரி உடைக்கப்பட்டு அதனுல் இருந்த பொருட்களை வெளியே எறியப்பட்டுள்ளது.
.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10(1)(1)
Msj 01

முஸ்லிம் பாடசாலையில் திடீரென முளைத்த புத்தர் சிலை (படங்கள் இணைப்பு)



ஓட்டமாவடி கோட்டக்கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்தரைச்சேனை அஸ்ஹர் வித்தியால விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு (30.06.2013) திடீர் என புத்தர் சிலை முளைத்துள்ளதால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. 
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலம் என்பவற்றுக்கு உள்ள ஓரே விளையாட்டு மைதானம் இம் மைதானமாகும் இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
கடந்த 01.03.2010ம் திகதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்தி ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக் காணி புத்த ஜயந்தி விகாரைக்குறிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக் கூடாது என்றும் கூறியதற்கிணங்க பாடசாலை நிறுவாகத்தால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இது தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவனைகள் இடம் பெற்றதன் பின்னர் நீதி மன்றத்தால் விகாரைக்குறிய இடம் அல்ல என்றும் பாடசாலை மைதானம் என்று சுற்றிக் காட்டி 25.06.2013ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று அதிகாலை (01.07.2013) மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில்  மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றார்


தென்கிழக்குப்பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எச்.எம்.எம்.நழீர் கணினி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றுள்ளார்
சீன அரசினால் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்திட்டத்தின் கீழ்
தெரிவுசெய்யப்பட்டு சீனா பீஜிங் தொழல்நுட்ப பல்கலைக்கழகத்தில் கலாநிதி
மாணவனாக இணைந்து கொண்ட இவர் அங்கு மேற்கொண்ட மிகச்சிறந்த ஆய்வுகள்மற்றும் வெளியீடுகளுக்காக 2010மற்றும்2011ஆண்டுகளில் மிகச்சிறந்த கலாநிதி மாணவனாகவும் தெரிவு செய்யப்பட்டார்
நற் பிட்டிமுனையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை கல்முனை கார்மல் பாத்திமாக்கல்லூரியிலும் உயர்கல்வியை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்ட இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எச்.முகம்மது மற்றும் ஹாஜியானி எஸ்.மீரா உம்மா ஆகியாரின் புதல்வராவார்.

நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும பொருட்களை அகற்றும் பணியில் கல்முனை பொலிஸார்!


கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரம், கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு பிரதேசங்களின் பிரதான வீதியிலுள்ள வர்த்தகக் கடைகளினால் நடைபாதைகளில்; வைக்கப்பட்டிருக்கும விற்பனைப் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 
அதற்கமைவாக சாய்ந்தமருது பிரதேச வர்த்தக கடைகளினால் நடைபாதைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அகற்றும் பணியினை கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வசந்தகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மேற்கொண்டனர். 

கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மூடப்படுமா..?

    கல்முனையில் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் தமிழ் மொழி பேசும் மக்களின் நன்மை கருதி திறந்து வைக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலக நடவடிக்கைகளில் பெரும்பாலானவை மெல்ல மெல்ல நிறுத்தப்பட்டு இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளில் பெரும்பாலானவை அம்பாறை மாவட்ட அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் திட்டமிட்ட சதி போன்று கல்முனை மாவட்ட அலுவலகம் தற்போது உப அலுவலகமாக படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து இம் மாவட்ட தமிழ் மொழி பேசும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
    
  இந்த சதி செயல்பாடுகள் குறித்து துரித நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம், தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எவரும் இல்லையா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

Sunday, June 30

கல்முனை சாஹிறா கல்லூரியில் வெற்றிகரமாக இடம்பெற்ற ZESDO அமைப்பின் இரத்ததான நிகழ்வு


 செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் இன்று (30-06-2013) நடைபெற்றது. ZESDO அமைப்பின் உறுப்பினர்களான அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பணி புரியும் MCMC. ரிழா (Nurse), SHM. ஜர்மின் (MLT) ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
செஸ்டோ அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின்  வழி காட்டலில் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

நாம் அரசை நம்பியிருக்கவில்லை சொந்த நிதியிலேயே இயங்குகிறோம் : கல்முனை மேயர்


அரச நிதி எமக்கு முற்றாக கிடைப்பதில்லை என்று கூறமுடியாது ஆனாலும் அதை நம்பி எமது மாநகர சபை இயங்கவில்லை, எமது வருமானத்தை வைத்தே நாம் எமது நகரத் தேவைகளை நிறைவேற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார் கல்முனை மேயர் ஷிராஸ் மீராசாஹிப்.
நாம் கட்சித் தலைமைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள், எல்லா பிரச்சனைகளையும் கட்சித்தலைமை தீர்க்க வேண்டிய அவசியமும் இல்லை என கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் கூறிய அவர், எமக்கிருக்கும் நெருக்குதல்களையும், பழிவாங்கல்களையும் மீறி நகரசபைக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே நாம் சிறப்பாக இயங்குகிறோம் எனத் தெரிவித்தார்.
13ம் திருத்தச்சட்டத்தினை நிராகரிப்பது எமக்கிருக்கும் உரிமைகளை பறித்தெடுப்பது என்றும் சுட்டிக்காட்டிய அவர் முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் தேவைகள் அறிந்து இயங்கும் கட்சி எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இடம்பெற்ற வாராந்த முஸ்லிம்குரல் ஒலிபரப்பின் மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Saturday, June 29

நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத் திறப்புவிழா




 
 
 
 
 
 
 
 
 
 
 
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடத்திறப்புவிழா இன்று 29 06 2013 ஆம் திகதி காலை 10 மணிக்கு பிரதேச செயலாளர் ஹாஜியானி திருமதி ரிபா ஜலீல் அவர்களது தலைமையில்  நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள்  அமைச்சர்  WDJ செனெவிரெட்னெ அவர்கள் கலந்து  கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் பைசால் காசிம் ,திருமதி சிரியாணி,மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசனயாக ,மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் L D  அல்விஸ்  மற்றும் அம்பாறை மாவட்ட உதவியாரசாங்க அதிபர்களும்,நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ,பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிந்தவூர் பிரதேசமானது கிட்டத்தட்ட 31000 மக்கள் தொகையையும்,25 கிராம சேவகர்  பிரிவுகளையும் கொண்ட ஒரு புராதன கிராமமாகும் இங்கு நெற்செய்கையும்,மீன்பிடியுமே பிரதான தொழில்களாக காணப்படுகின்றன .நவீன முறையில் வடிமக்கப்பட்டு சுமார் 45 மில்லியன் ரூபா செலவில் நிருமாநிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தொகுதிபயன்பாட்டுக்கு வருவதிலிருந்து  இட நெருக்கடியால் இதுவரை காலமும் சேவை வழங்குவதில்  ஏற்பட்ட இடர்பாடுகள் நீக்காபட்டிருப்பதால் மக்களுக்கு சிறந்த சேவை  எதிர்காலத்தில் கிடைக்கப்பெறும் என்று இந்நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் புதிய பயிலுனர் அனுமதி


aa
2013-2015 கல்வியாண்டுக்கான புதிய பயிலுனர் அனுமதி எதிர் வரும் 03.07.2013 ந் திகதி புதன் கிழமை காலை 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் நடைபெறுமென பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
நேர்முகப் பரீட்சைகளின் முடிவுகளின் படி 190 பயிலுனர்கள் பின்வரும் 07 கற்கை நெறிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
1. விஞ்ஞானம் – 30
2. கணிதம் – 30
3. வர்த்தகமும்கணக்கியலும்- 20
4. ஆரம்ப நெறி – 50
5. இஸ்லாம் – 15
6. தமிழ் – 30
7. விசேட கல்வி -15
மேற்படி பயிலுனர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் தபாலில் இடப்பட்டுள்ளன. கடிதம் கிடைத்தவர்கள் மாத்திரம் ஜுலை 03 ம் திகதி கல்லூரிக்கு உரிய ஆவணங்களுடன் வருகை தந்து அன்றைய தினம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பீடாதிபதி வேண்டிக்கொள்கின்றார்.

புதிய பயிலுனர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

பல பெண்களை ஏமாற்றிய மன்மதன் கல்முனையில் சிக்கினார் !

20130629-072507.jpg

பல பெண்களை கையடக்கத்தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ.கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக பெண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காதலித்து திருமணம் செய்வதாக நடித்து பணம், நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது வைத்தியசாலை சத்திர சிகிச்சை உபகரணங்கள் கபளீகரம்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!


mansoorசாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்கைப் பிரிவு உபகரணங்களை கபளீகரமாக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறித்து முறைப்படி முறையிட்டால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
ஒளிரும் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற ஆசாத் சாலியின் மக்களுடனான சந்திப்பு


தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி அவர்களின்  மக்களுடனான சந்திப்பு இன்று(28) வெள்ளிக்கிழமை மாலை சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள சீ ப்ரீஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.


தேசிய ஐக்கிய முன்னனியின் அம்பாறை மாவட்ட கிளை  ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன், கலாநிதி. விக்ரமபாகு கருணாரத்ன

(தலைவர் - நவ சம சமாஜ கட்சி),  சரத் மனோமேந்திரா (தலைவர் நவ சிஹல உறுமய கட்சி), ஹேமசிறி ஹப்பு ஆராச்சி (தலைவர் - எக்சத் ஜனதா கட்சி) ஆகியோருடன் கல்முனை மாநகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Friday, June 28

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பல்கலைக்கழக வாளகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த மாணவனை மீண்டும் கற்றல் செயற்பாடுகளுக்கு சேர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
பகிடி வதை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த மாணவனுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கு முயற்சித்தபோது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை பொலிஸார் மறித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனால் பல்கலைக்கழக ஊழியர்களும் விரிவுரையாளர்களும் நுழைவாயிலுக்கு வெளியே நீண்டநேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தபோதிலும் அது பலனளிக்கவில்லை.

அடிக்கல் விழாக்களை நடத்தி காலம் கடத்தும் கல்முனை அரசியல்வாதிகள்!


கல்முனைப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் தற்போதய அரசியல்வாதிகள் எவரும் செய்வதாக இல்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அபிவிருத்தி என்ற  பேரில் அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன நிகழ்வுகள் என்பன மிகக் கோலாகலமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படுவதாக இல்லை எனவும் கூறுகின்றனர்.
அடிக்கல் நடும் விழாக்கள், அங்குரார்ப்பன வைபவங்கள் என்பனவற்றிற்கு கல்முனையிலிருந்து சாய்ந்தமருது வரை மற்றும் மருதமுனை பிரதான பாதைகள் பல்லாயிரக்கணக்கான ரூபா செலவிடப்பட்டு பச்சை நிறப் பொலித்தீன்களாலும்  பல நிற பல்புகளாலும் அலங்கரிக்கப்படுகின்றன.
பொது மேடை ஒன்று போடப்பட்டு கட்சியிலுள்ள முக்கியஸ்த்தர்கள் தொடக்கம் தலைவர் வரை நள்ளிரவையும் தாண்டி தமது பக்க நியாயங்களையும் தாங்கள் பொறுமை காத்திருப்பதையும் நாம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் சரியான நேரத்தில் சரியான முடிவையும் எடுப்போம் எனவும் கூறுகின்றனர்.

சாய்ந்தமருது பிராந்திய சிவில் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்


(எம்.வை.அமீர்) 
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சேகவர் பிரிவுகளில் இருந்து பிரிவுக்கு ஐவர் வீதம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒன்றிணைத்து விழிப்பூட்டும் நிகழ்வு ஒன்று 27-06-2013 மாலை 7 மணியளவில் சாய்ந்தமருது ‘ரியாளுள் ஜன்னா’ வித்தியாலத்தில் அந்தப்பாடசாலையின் அதிபர் தலைமயில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி AWA கfப்பாரும் விசேட அதிதியாக கல்முனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ALA வாஹீத் மற்றும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வர் AA வசீர் மற்றும் உலமாக்களும் போலீசாரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு சிறப்புரையாற்றிய பிரதம போலீஸ் பொறுப்பதிகாரி,
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பிலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் சம்மந்தமாகவும் விரிவான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
தொடர்ந்து உரையாற்றும் போது சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் இணைப்பு பாலமாக திகழ வேண்டும் என்றும் கல்முனை போலீஸ் நிலைய எல்லைக்குள் இடம்பெறும் சில சீர் கேடுகளையும் இப்படியான சீர் கேடுகள் பிராந்திய மக்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் என்றும் இங்கு இடம்பெறும் தறுகளை திருத்திக் கொள்வதற்காக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முஸ்லீம்கள் செறிந்து வாழும் இது போன்ற பிரதேசத்தில் இடம்பெறும் சீர் கேடுகள் மாற்றுச்சமுகத்தின் மத்தியில் மிகுந்து பேசப்படும் என்றும் உதாரணத்துக்கு தலைக்கவசம் இல்லாது வாகனம் செலுத்த சிலர் கோருவதாகவும் இலங்கையில் சட்டமாக்கப்பட்டுள்ள விடையத்தை தன்னிடம் அனுமதி கோரி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ள தற்கொலைக்கு தன்னிடம் அனுமதி கோருவதாகவும் தெரிவித்தார்.