Wednesday, September 14
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அரசியல் தலையீடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இதேவேளை வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒருசிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் தாதியர்களும், ஏனைய ஊழியர்களும் ஆதரவு வழங்கினர்.
Thursday, July 28
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள விளம்பர பலகைகளில் அழிக்கப்பட்ட அரபு எழுத்துக்கள்...
o
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வீதிகளுக்கு நகர சபையினால் பெயரிடப்பட்ட விளம்பர பலகைகளில் அரபு எழுத்துக்கள் இனந்தெரியாதோரினால் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீதி விளம்பர பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் வீதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதில் அரபு எழுத்து மாத்திரம் இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் யார் இதை அழித்தார்கள் என்பது தொடர்பில் எமக்கு இன்னும் தெரியவில்லை எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். (எம்.சுக்ரி)
சாய்ந்தமருது பொது நூலகத்தின் குறைகளை நிவர்த்தி செய்து கல்வி வேட்கையைத் தீர்க்குமாறு பிரதேச வாசிகள் வேண்டுகோள்
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரினால் திறந்துவைக்கப்பட்ட இப்பொது நூலகம் சுமார் 25 வருடகாலம் பழமை வாய்ந்தது. இவ்வாறான கட்டிடம் இதுவரை புனர்
Wednesday, July 27
சம்மாந்துறையில் குடிசைகள் தீக்கிரை
Tuesday, July 26
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் தொழிநுட்ப மாற்றீடு பயிற்சி
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
By Afzal On Tuesday, July 26, 2011
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவான 17 பொறியியல் துறை மாணவர்கள் உட்பட 75 பல்கலைக்கழக மாணவர்களையும் மற்றும் விளையாட்டுதுறையில் தேசிய மட்டத்திற்கு தெரிவான 30 மாணவர்களையும் பாராட்டி க.பொ.த.உயர்தர மாணவர் தினத்தில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இவ்வருடம் தெரிவான 17 பொறியியல் துறை மாணவர்கள் உட்பட 75 பல்கலைக்கழக மாணவர்களையும் மற்றும் விளையாட்டுதுறையில் தேசிய மட்டத்திற்கு தெரிவான 30 மாணவர்களையும் பாராட்டி க.பொ.த.உயர்தர மாணவர் தினத்தில் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்வு
26/07/2011
காத்தான்குடி டீன் வீதியில் கடற்கரையோரமாக அமையப்பெற்றுள்ள MSM. அப்துல்லாஹ் பயல்வான் அவர்களின் நினைவாலயத்தில் அவரது 87ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தரீக்கதுள் முப்லிஹீன் அமைப்பினரால் அன்னதான நிகழ்வு கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்த நிகழ்வானது இசை முழக்கங்களுடன் பாரிய மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த நிகழ்வில் ஆண், பெண் வித்தியாசமின்றி சகலரும் கலந்து கொண்டிருப்பத்துடன் ஒருசில வெளியூர் முகங்களையும் காணமுடிகின்றது.
இது தொடர்பில் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு முக்கிய உலமாவை காத்தான்குடி இன்போ தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறினார்,
நிந்தவூர் கசிப்ல் உலூம் அரபுக் கல்லூரியின் மௌலவி பட்டமளிப்பு விழா
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் புதிய விளையாட்டு மைதானமொன்றை அபிவிருத்தி செய்வதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில்
அதன் தலைவரும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபருமான அல்-ஹாஜ் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக் (ஜவாத்) பிரதம அதிதியாக கலந்துகொண்டு மைதானத்திற்கான மண் நிரப்பும் பணியை ஆரம்பித்து வைத்தார்.Sunday, July 24
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பொத்துவில் பிரதேசத்திற்கான அலுவலகம் திறந்து வைப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஏ. பாயில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 2364 வாக்குகள் கிடைத்து்ளது.
வெற்றி பெற்ற மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.பாயிசுக்கு தனது சொந்த ஊரில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Saturday, July 23
கல்முனை நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உதவி

கல்முனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை ஜம்மியத்துல் உலமா சபையினூடாக மீன்பிடி உபகரண உதவிகளை வழங்கியுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலத்தின் கூட்ட மண்டபத்தில் இஸட். ஏ.நதீர் மெளலவி தலைமையில் இடம் பெற்ற இன்நிகழ்வில் கல்முனை ஜம்மியத்துல் உலமாவும் மற்றும் நன்நீர் மீன்பிடியாளர்களும் கலந்து கொண்டணர்
இன்நிகழ்வின் போது நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு வலை மற்றும் மீண் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில் இடம்பெற்ற கிறிக்கட் சுற்றுப்போட்டி!
மாவடிப்பள்ளி வில் ரு வின் ( Will to Win ) விளையாட்டுக்கழகத்தின் 4 வது ஆண்டு நிறைவையொட்டி மாவடிப்பள்ளி மையோன் வளாகத்தில் இடம்பெற்ற
8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை றியல் ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 37 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை மிஸ்பாஹ் விளையாட்டுக் கழகம் 2.4 ஓவர்களில் ஒரு விக்கட்டினை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி! தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில்
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையிலான சதுரங்க சுற்றுப்போட்டி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்க கூடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட பதில் பீடாதிபதியும் விளையாட்டு ஆலோசனை பேரவையின் பணிப்பாளருமான கலாநிதி ஏ. ஜௌபரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறை பொறுப்பாளர் எம்.எல்.ஏ. தாஹிரின் ஏற்பாட்டில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் , பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பிரசன்யமாகி இருந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)















