o
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள வீதிகளுக்கு நகர சபையினால் பெயரிடப்பட்ட விளம்பர பலகைகளில் அரபு எழுத்துக்கள் இனந்தெரியாதோரினால் அழிக்கப்பட்டுள்ளன.இந்த வீதி விளம்பர பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் வீதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதில் அரபு எழுத்து மாத்திரம் இனந்தெரியாதோரால் அழிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் யார் இதை அழித்தார்கள் என்பது தொடர்பில் எமக்கு இன்னும் தெரியவில்லை எனவும் நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் கூறினார்.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். (எம்.சுக்ரி)























தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பேரவை, கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ”நாடு காத்து நம் உரிமையை வென்றெடுப்போம்” என்ற பேரணி மற்றும் பிரகடனம் ஏட்பாட்டாளர்களினால் பிட்போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடம்பெறவிருந்தது. இது தொடர்பான விரிவான செய்தி பின்னர் வழங்கப்படும்.















