இருப்பதையும் படங்களில் காணலாம்.
(ஏ.ஜே.எம்.ஹனீபா)சம்மாந்துறை மண்ணின் முடிசூடா மன்னன் முன்னாள் அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீட் இன்று(29) தனது 85வது வயதில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இரவு 9.25 மணிக்கு மரணமாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் கடந்த 24ம் திகதி சுகயீனமுற்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.




கல்முனை மாநகரத்தில் சிறந்த நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை உடனுக்குடன் வழங்க கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.கடந்த காலங்களில் மாநகர சபை நடை முறைகளில் இருந்து வந்த குறைபாடுகள் களையப்பட்டு தற்போது முதல்வரினால் உடனடி தீர்வு வழங்கப் படுகின்றது.


கல்முனை அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு கல்முனை மாநகர பிரதி மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நேற்று புதன்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை அவதானித்தார்
கிழக்கு மாகாணத்தை ஈரான் நாட்டின் காஸ்வின், இந்தியாவின் கேரளா மற்றும் மலேசியா நாட்டின் மலாக்கா ஆகிய மாநிலங்களுடன் இணைத்து கிழக்குமாகாணத்தின் கல்வி வர்த்தகம் கைத்தொழில் தொழிழசார் கல்வி, தகவல் தொழிநுட்பம் சுயதொழில் முயற்சி மற்றும் மொழியாற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் முன்மொழிந்துள்ளார்.
























கலாசார மரபுரிமைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து சாய்ந்தமருது பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த கிராஅத் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் பிரதேச மட்ட இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மரம் நடும் நிகழ்வு இடம்பெற்றது


